ஒளியியல் மதிப்பீடு: I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள் அ) சமதள ஆடிகள் ஆ) சாதாரண ஆடிகள் இ) கோளக ஆடிகள் ஈ) இவற்றில் எதுவுமில்லை விடை: இ) கோளக ஆடிகள் 2. உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி அ) குவி ஆடி ஆ) குழி ஆடி இ) வளைவு ஆடி ஈ) இவற்றில் எதுவுமில்லை விடை: அ) குவி ஆடி 3. வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி அ) குழி ஆடி ஆ) குவி ஆடி இ) சமதள ஆடி ஈ) எதுவுமில்லை விடை: ஆ) குவி ஆடி 4. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு __________________ எனப்படும். அ) வளைவு மையம் ஆ) ஆடிமையம் இ) ம...