வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

 



உரைநடை உலகம்   

இயல் ஒன்று -வளர்தமிழ் 


மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 


1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________ 

அ) புதுமை  ஆ) பழமை  இ) பெருமை  ஈ) சீர்மை 

விடை: ஆ) பழமை


2. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ 

அ) இடன் + புறம் ஆ) இடை + புறம் இ) இடம் + புறம் ஈ) இடப் + புறம் 

விடை: இ) இடம் + புறம்


3. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ 

அ) சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை ஈ) சீற் + இள

விடை: அ) சீர் + இளமை


4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்

விடை: ஆ) சிலப்பதிகாரம்


5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ்

விடை: ஆ) கணினித்தமிழ்


6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்  ஈ) வாணிதாசன்

விடை: ஆ) பாரதியார்


7. 'மா' என்னும் சொல்லின் பொருள்________

அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா

விடை: இ) விலங்கு


கோடிட்ட இடத்தை நிரப்புக.


1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி.


2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.


3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.


சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக.


1. தனிச்சிறப்பு .....................................................................................................................

தமிழ் இலக்கியங்கள் தனிச்சிறப்பு மிக்கவை.


2. நாள்தோறும் ....................................................................................................................

மாணவர்கள் பாடங்களை நாள்தோறும் படிக்க வேண்டும்.


குறுவினா


1. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?


சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். அதுப�ோல இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குககிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் ஆகும். 

அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று உணரலாம்.


2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.


தமிழ்க் காப்பியங்களுள் சிலவற்றின் பெயர்கள்:

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, தேம்பாவணி, சீறாப்புராணம்.


சிறுவினா


1. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?


உயர்திணை, அஃறிணை என இருவழ்கத் திணைகளை அறிவோம். உயர்திணையின்

எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை எனறு கூறாமல் 

அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) எனறு பெயர் இட்டனர் நம் முன்னோர்.


பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனை கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு+அல்+காய்) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் மொழி.


2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.


தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள்

இனிமை கொண்டவை. பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்

என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.



3. தமிழ் மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

  • செம்மை மொழி என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகச்சில மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று.
  • தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி.
  • தமிழ்மொழி பேசவும், படிக்கவும்,எழுதவும் உகந்த மொழி.
  • தமிழ் மொழி சொற்சிறப்பு வாய்ந்தது.
  • தமிழ் மொழி வளமை மிக்கது.
  • தமிழுக்கு முத்தமிழ் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.


சிந்தனை வினா


1. தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?


  • தமிழ்மொழி பேவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. 

  • உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் மொழியைப் படிக்க இயலும்.

  • தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளதால், தமிழ் எழுதவும் எளியது.

(எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ 

இடஞ்சுழி எழுத்துகள     - ட, ய, ழ


2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.


  • தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. 

  • தற்பேது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மென்மேலும் வளர்ந்து கொண்டேவருகிறது.

  • இன்றைய வளர்ச்சிக்கேற்ப இணையம்,செய்தி, வானொலி, தொலைக்காட்சி, கைபேசி என அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தும் வகையில் வளர்ந்தும், வளர்ந்து கொண்டேயும் இருக்கிறது தமிழ் மொழி.


Popular posts from this blog

8-அறிவியல்-நுண்ணுயிரிகள்-மதிப்பீடு-வினா-விடைகள்

VIII-அறிவியல்-விசையும் அழுத்தமும்-மதிப்பீடு- வினா விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்