வகுப்பு 6 ப1அ4 தாவர உலகம் வினா விடைகள்

 





தாவர உலகம்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. குளம் ___________________ வாழிடத்திற்கு ஒரு உதாரணம்.

அ) கடல்   ஆ) நன்னீர்

இ) பாலைவனம்   ஈ) மலைகள்

விடை: ஆ) நன்னீர்


2. இலைத்துளையின் முக்கிய வேலை ___________________.

அ) நீரைக் கடத்துதல் ஆ) நீராவிப்போக்கு

இ) ஒளிச் சேர்க்கை ஈ) உறிஞ்சுதல்

விடை: ஆ) நீராவிப்போக்கு


3. நீரை உறிஞ்சும் பகுதி ____________ ஆகும்.

அ) வேர்  ஆ) தண்டு 

இ) இலை ஈ) பூ

விடை: அ) வேர்


4. ஆகாயத் தாமரையின் வாழிடம்

அ) நீர் ஆ) நிலம்

இ) பாலைவனம் ஈ) மலை

விடை: அ) நீர் 


II.  கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. புவிப் பரப்பு _____ % நீரால் மூடப்பட்டுள்ளது.

விடை: 70


2. பூமியில் காணப்படும் மிகவும் வறண்ட பகுதி _____________.

விடை: பாலைவனம்


3. ஊன்றுதல், உறிஞ்சுதல் ஆகிய இரண்டும் _____________  வேலை.

விடை: வேரின்


4. ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மைப் பகுதி _____________ .

விடை: இலை


5. ஆணிவேர்த் தொகுப்பு _____________ தாவரங்களில் காணப்படுகிறது.

விடை: இருவித்திலைத்


III.  சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

1. தாவரங்கள் நீரின்றி வாழ முடியும்.

விடை: தவறு

தாவரங்கள் நீரின்றி வாழமுடியாது.


2. தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது.

விடை: தவறு

சில தாவரங்களில் பச்சையம் காணப்படுவதில்லை.


3. தாவரங்களின் மூன்று பாகங்கள் – வேர், தண்டு, இலைகள்.

விடை: தவறு

தாவரங்களின் நான்கு பாகங்கள் – வேர், தண்டு, இலைகள், மலர்கள் (அ)

தாவரங்களின் இரண்டு முக்கிய பாகங்கள்- வேர்த்தொகுப்பு, தண்டுத்தொகுப்பு


4. மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்.

விடை: தவறு 

மலைகள் காடு(நிலம்) வாழிடத்திற்கு ஓர் உதாரணம்.


5. வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.

விடை: தவறு

இலைகளும் தண்டுகளும் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.


6. பசுந்தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.

விடை: சரி


IV.  பொருத்துக.

1. மலைகள் - இமயமலை

2. பாலைவனம் - வறண்ட இடங்கள்

3. தண்டு      - கிளைகள்

4. ஒளிச் சேர்க்கை - இலைகள்

5. சல்லிவேர்த் தொகுப்பு - ஒரு வித்திலைத்தாவரங்கள்


V.  மிகக் சுருக்கமாக விடையளி.

1. வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.

வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை, நீர் வாழ் தாவரங்கள், நில வாழ் தாவரங்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கிறோம்.


2. பாலைவனத் தாவரங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.


சப்பாத்திக் கள்ளி, அகேவ், சோற்றுக் கற்றாழை, பிரையோஃபில்லம்.


3. வாழிடம் என்பதை வரையறு


ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் அதற்கு ஒரு இடம் தேவை. அந்த இடமே அதன் வாழிடம் ஆகும்.


4. இலைக்கும், ஒளிச் சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

இலைகள் பச்சையம் எனும் நிறமியைக் கொண்டுள்ளன, இதன் உதவியால் இலைகள் உணவு தயாரிக்கும் முறை ஒளிச்சேர்க்கை எனப்படும்.



VI.  பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதுக.

1. இலைகள் – தண்டு – வேர் - மலர்கள்

வேர் - தண்டு – இலைகள் –மலர்கள்


2. நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்

ஊன்றுதல்– உறிஞ்சுதல் –கடத்துதல் – நீராவிப்போக்கு


VII.  சுருக்கமாக விடையளி.

1. மல்லிகைக் கொடி ஏன் பின்னு கொடி என அழைக்கப்படுகிறது ?

மல்லிகை, நீண்ட, மெலிந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. அவை தானாகவே நேராக நிலைத்து நிற்கும் தன்மையற்றறு ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன. எனவே இவை பின்னு கொடி என்றழைக்கப்படுகிறது.


2. ஆணிவேர் மற்றும் சல்லி வேர்த்தொகுப்புகளை ஒப்பீடு செய்க.


ஆணிவேர்

சல்லிவேர்

விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது. முளைவேர் தடித்த முதல்நிலை வேராக வளர்கிறது. இதிலிருந்து துணை வேர்களான இரண்டாம்நிலை வேர்கள் தோன்றுகின்றன. 

முதல்நிலை வேர், சிறிது காலத்தில் அழிந்து, தண்டின் அடிப்பகுதியில், சம பருமனுள்ள வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன. 

பொதுவாக இரு வித்திலைத் தாவரங்களில் இவ்வகை வேர் காணப்படுகிறது.

பெரும்பாலும் ஒரு வித்திலைத் தாவரங்களில் இவ்வேர்த்தொகுப்பு காணப்படுகிறது.

எ.கா. அவரை, மா, வேம்ப

எ.கா. நெல், புல், மக்காச் சோளம்.


3. நிலவாழிடம் மற்றும் நீர்வாழிடத்தை வேறுபடுத்துக.



நில வாழிடங்கள்

நீர்வாழிடம் 

காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகிய நிலப்பரப்புகளில் காணப்படும் வாழிடங்கள் நில வாழிடங்கள் எனப்படும். 

நீர்வாழிடம் என்பது நிரந்தரமாக நீர் சூழ்ந்த பகுதியையும், அவ்வப்போது நீர் சூழ்ந்த பகுதியையும் உள்ளடக்கியது.

நில வாழிடங்கள் இயற்கையானதாகவோ, மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.

வாழிடங்கள், நன்னீர் வாழிடம் , கடல் நீர் வாழிடம் என  இருவகைப்படும்


4. உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களைப் பட்டியலிடுக.


எங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்கள்;

அசோகமரம், மே ப்ளவர், வேப்பமரம்,தக்காளி, வெண்டை, கீரைச்செடிகள், பப்பாளி போன்றவையாகும்


VII.  விரிவாக விடையளி.


1. வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடுக.


வேரின் பணிகள்

  • வேர்கள் தாவரத்தைப் பூமியில் நிலை நிறுத்துகின்றன.

  • ம ண் ணி லி ரு ந் து நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சுகின்றன.

  • கேரட், பீட்ரூட் போன்ற தாவரங்கள், தாங்கள் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன.





தண்டின் பணிகள்  

  • தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைத் தாங்குகின்றது.

  • வேரினால் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின்

  • மற்ற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றன.

  • இலையினால் தயாரிக்கப்பட்ட உணவு தண்டின் வழியாக தாவரத்தின் பிற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றது.

  • சில தாவரங்கள் உணவைத் தண்டில் சேமித்து வைக்கின்றன. எ.கா. கரும்பு



2. கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் படத்தில் அதன் தொடர்ச்சியான கருத்துகளை

விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்.



Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்