வ7 ப2 பா1 அறிவியல் - வெப்பம் மற்றும் வெப்பநிலை - மதிப்பீடு - வினா-விடைகள்
வகுப்பு - 7 வெப்பம் மற்றும் வெப்பநிலை மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு 1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை------------------ அ. கெல்வின் ஆ. பாரன்ஹீட் இ. செல்சியஸ் ஈ. ஜூல் விடை: அ. கெல்வின் 2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம் அ. விரிவடைகிறது ஆ. சுருங்குகிறது இ. அதே நிலையில் உள்ளது ஈ. மேற்கூறிய ஏதுமில்லை. விடை: அ. விரிவடைகிறது 3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை அ. 0°C ஆ. 37°C இ. 98°C ஈ. 100°C விடை: ஆ. 37°C 4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம். அது ---------- அ. பாதுகாப்பான திரவம் ஆ. தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது. இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது. ஈ. விலை மலிவானது விடை: இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது. 5. கீழே உள்ளவற்றில் எந்த இணைதவறானது K ( கெல்வின்) = °C ( செல்சியஸ்) + 273.15 °C K அ. - 273.15 0 ஆ. ...