8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்
விலங்குகளின் இயக்கம் மதிப்பீடு வினா - விடைகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன? (i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள் கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க. அ) (i) மற்றும் (iii) ஆ) (ii) மற்றும் (iv) இ) (i) மற்றும் (iv) ஈ) (iii) மற்றும் (ii) விடை: அ) (i) மற்றும் (iii) 2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை? அ) நாய் ஆ) நத்தை இ) மண்புழு ஈ) மனிதர் விடை: ஆ) நத்தை 3. _________ மூட்டுகள் அசையாதவை. அ) தோள்பட்டை மற்றும் கை ஆ) முழங்கால் மற்றும் மூட்டு இ) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு ஈ) கீழ் தாடை மற்றும் மேல் தாடை விடை: இ) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு 4. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்? அ) தண்ணீரில் எளிதாக நீந்த ஆ) ஒரு மீன் போல காணப்பட இ) நீரின் மேற்பரப்பில் நடக்க ஈ) கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை) விடை: அ) தண்ணீரில் எளிதாக நீந்த 5. உங்கள் வெளிப்புறக் காதினைத்