8 - தமிழ் - இரண்டாம் பருவம் - திருக்கேதாரம் - மதிப்பீடு - வினா- விடைகள்

 வகுப்பு - 8


கவிதைப்பேழை


திருக்கேதாரம்


I. சொல்லும் பொருளும் 


பண்      சை 

கனகச்சுனை      பொன் வண்ண நீர்நிலை 

மதவேழங்கள்      மதயானைகள் 

முரலும்      முழங்கும் 

பழவெய்     - முதிர்ந்த மூங்கில்


மதிப்பீடு 


Ii. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. காட்டிலிருந்து வந்த _________ கரும்பைத் தின்றன.

அ) முகில்கள் 

ஆ) முழவுகள்

இ) வேழங்கள் 

ஈ) வேய்கள் 

விடை: இ) வேழங்கள்


2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

அ) கனகச் + சுனை 

ஆ) கனக + சுனை

இ) கனகம் + சுனை 

ஈ) கனம் + சுனை

விடை: இ) கனகம் + சுனை


3. முழவு + அதிர என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) முழவுதிர 

ஆ) முழவுதிரை

இ) முழவதிர 

ஈ) முழவுஅதிர 

விடை: இ) முழவதிர


Iii. குறுவினா


1. தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

புல்லாங்குழல் மற்றும் முழவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுகிறார்.

 

IV. சிறு வினா.


1. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?


  • பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். 

  • கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். 

  • இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறhர்.

 

V. சிந்தனை வினா


விழாக்களின்போது இசைக் கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றி இருக்கும் என எழுதுக.


  • உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புபவர். அதனால் விழாக்களின்போது, பாட்டுப்பாடி, இசைக்கருவிகள் மூலம் இசையெழுப்பி இறைவனை மகிழ்விக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

  • இசைக்கருவிகளை இசைக்கும் போது உணர்ச்சிப் பெருக்கும், கோவில் மணி ஓசையின்  மூலம் பக்திப்பெருக்கும் ஏற்படுவதாலும் விழாக்களின்போது இசைக் கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம்.

  • விழாக்களில், மங்கல நிகழ்வுகளின்போது,  அமங்கலமான பேச்சுக்கள், ஒலிகள் போன்றவை கேட்காமல் இருக்கவும், தேவையற்ற ஒலிகளின் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வுகளில் இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம்.


VI. நூல் மற்றும் ஆசிரியர் குறிப்பு:

  • சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.

  • இவர் நம்பியூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. 

  • இவர் இயற்றிய திருத் தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.

  • திருஞானசம்பந்தர், திருனா நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.

  • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் ஆவார்.

  • தே+ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே+வாரம்- இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். 

  • பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8-அறிவியல்-நுண்ணுயிரிகள்-மதிப்பீடு-வினா-விடைகள்

VIII-அறிவியல்-விசையும் அழுத்தமும்-மதிப்பீடு- வினா விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்