8 - அறிவியல் - அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்- மதிப்பீடு- வினா - விடைகள்

 

அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்


மதிப்பீடு


I.  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?

அ) சூரியன் 

ஆ) சந்திரன்

இ) விண்மீன்கள் 

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்


2. மங்கள்யான்_____________ க்கு அனுப்பப்பட்டது.

அ) சந்திரன் 

ஆ) செவ்வாய்

இ) வெள்ளி 

ஈ) புதன்

விடை: ஆ) செவ்வாய்


3. சந்திரயான் – I விண்ணில் செலுத்தப்பட்ட நாள்

அ) 2008 அக்டோபர் 22 

ஆ) 2008 நவம்பர் 8

இ) 2019 ஜூலை 22 

ஈ) 2019 அக்டோபர் 22

விடை: அ) 2008 அக்டோபர் 22


4. சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது_____________.

அ) புதன் 

ஆ) வெள்ளி 

இ) பூமி 

ஈ) செவ்வாய்

விடை: ஈ) செவ்வாய்


5. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம்_____________________.

அ) நியூட்டனின் முதல் விதி

ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி

இ) நியூட்டனின் மூன்றாம் விதி

ஈ) இவை அனைத்தும

விடை: இ) நியூட்டனின் மூன்றாம் விதி


6. கிரியோஜெனிக் எரிபொருள் ______________எவ்வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படும்?

அ) அறை 

ஆ) குறைந்த

இ) மிகக்குறைந்த 

ஈ) மிக அதிக

விடை: இ) மிகக்குறைந்த 


7. நாசாவின் திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.

அ) அப்போலோ - 5 

ஆ) அப்போலோ - 8

இ) அப்போலோ - 10 

ஈ) அப்போலோ - 11

விடை: ஆ) அப்போலோ - 8


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.


1. விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு_________________.

விடை: வானியல்


2. சூரியன் ________________விண்மீன் திரளைச் சார்ந்தது.

விடை: பால்வெளி


3. செவ்வாய்க்கோள் _________________நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.

விடை: 687


4. பிற கோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம் __________.

விடை: மாஸ் ஆர்பிட்டர் மிஷன்


5. நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர்___________ ஆவார்.

விடை:  நீல் ஆம்ஸ்ட்ராங்


III.  சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.


1. சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்ந்து சூரியக் குடும்பத்தை உருவாக்குகின்றன.

விடை: சரி


2. சந்திரயான் – I ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

விடை: சரி


3. செவ்வாய்க் கோள் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள் ஆகும்.

விடை: தவறு

புதன் கோள் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள் ஆகும்.


4. PSLV மற்றும் GSLV ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் கோள்கள் ஆகும்.

விடை: தவறு

PSLV மற்றும் GSLV ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற துணைக்கோள் செலுத்து வாகனங்கள் ஆகும்.


5. ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்ம நிலையில் மட்டுமே காணப்படும்.

விடை: தவறு.

ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்ம மற்றும் திரவ ஆகிய இரு

நிலைகளிலும் காணப்படும்.


IV. பொருத்துக.


சந்திரயான்

எரிபொருள்

மங்கள்யான்

சந்திரன்

கிரையோஜெனிக்

முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய திட்டம்

அப்போலோ - 8

முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டம்

அப்போலோ - 11

செவ்வாய்


விடை: 

சந்திரயான்

சந்திரன் 

மங்கள்யான்

செவ்வாய்

கிரையோஜெனிக்

எரிபொருள்

அப்போலோ - 8

முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய திட்டம்

அப்போலோ - 11

முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டம்


V. சுருக்கமாக விடையளி.


1. வான்பொருள்கள் என்றால் என்ன?


வானத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள், சந்திரன்,விண்கற்கள் மற்றும் வால்மீன்கள் போன்ற பிற பொருள்கள் யாவும் வான்பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.


2. விண்மீன் திரள் - வரையறு.


கவர்ச்சி விசையினால் பிணைக்கப்பட்ட இலட்சக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும்.


3. சந்திரயான்– 1 திட்டத்தின்நோக்கங்கள் யாவை?


சந்திரயான்-1 ன் நோக்கங்கள்

■ சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிதல். 

■ சந்திரனில் உள்ள தனிமங்களைக் கண்டறிதல். 

■ சந்திரனில் ஹீலியம் - 3 இருப்பதை ஆராய்தல். 

■ சந்திரனின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்குதல். 

■ சூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்தல்.


4. மங்கள்யான் திட்டத்தின் நோக்கங்களை வரிசைப்படுத்துக.


மங்கள்யான் திட்டத்தின் நோக்கங்கள்

■பிற கோள்களுக்கு விண்கலம் அனுப்பும் விண்வெளித் திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குதல். 

■ செவ்வாயின் மேற்பரப்பை ஆராய்தல். 

■ செவ்வாயின் வளி மண்டலத்தில் உள்ள பகுதிப்பொருள்களை அறிதல்.

■எதிர்காலத்தில் செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளையும், கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளல்.


5. கிரையோஜெனிக் எரிபொருள் என்றால் என்ன?

■ கிரையோஜெனிக் வகை இயக்கு பொருள்களில் எரிபொருள் அல்லது ஆக்சிகரணி அல்லது இரண்டும் திரவநிலை வாயுக்களாக (Liquefied gases) இருக்கும். 

■ இவை மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும். 

■ இவ்வகை இயக்கு பொருள்களை எரியூட்ட தனியான அமைப்புகள் தேவையில்லை. 

■ இவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கும் போது, இவை ஒன்றோடொன்று வினைபுரிந்து எரியத் தொடங்குகின்றன.


6. நாசாவில் பணியாற்றிய சில இந்தியர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.


கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்


VI. விரிவாக விடையளி.


1. சந்திரயான் – 1 ன் சாதனைகள் யாவை?


சந்திரயான்-1 ன் சாதனைகள்

■சந்திரனின் மணற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது. 

■சந்திரன் முற்காலத்தில் உருகிய நிலையில் இருந்ததை உறுதி செய்தது ■அமெரிக்காவின் விண்கலங்கள் அப்போலோ-15 மற்றும் அப்போலோ-11 ஆகியவை தரையிறங்கிய இடங்களின் படங்களைப் பதிவு செய்தது.

■சந்திரனின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர்பகுதிறன் கொண்ட நிறமாலைமானி மூலம் பெறப்பட்டன

■X கதிர் படக்கருவியின் மூலம் சந்திரனில் அலுமினியம், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருப்பது கண்டறியப்பட்டது. 

■சந்திரயான்-1 புகைப்படக்கருவி மூலம் 75 நாட்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டன. 

■நிலவில் எடுக்கப்பட்ட மேடுகள் மற்றும் பள்ளங்களைக் கொண்ட படங்களிலிருந்து சந்திரனின் மேற்பரப்பு குழிகளைக் கொண்டது என கண்டறியப்பட்டது. 

■சந்திரயான்-1 பூமியின் முழு வடிவத்தையும் முதன் முதலாக பதிவு செய்து அனுப்பியது. 

■சந்திரயான்-1 நிலவின் பரப்பில் மனிதர்களுக்கு உறைவிடமாகப் பயன்படும் வகையில் காணப்படக்கூடிய குகைகளைக் கண்டறிந்தது.


2. ராக்கெட்டின் பகுதிகளை விளக்குக


ராக்கெட்டின் பகுதிகள் 

ராக்கெட் என்பது மனிதர்களை அல்லது கருவிகளை பூமிக்கு அப்பால் விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக, சக்திவாய்ந்த இயந்திரத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி வாகனம் ஆகும். 


ராக்கெட்டில் நான்கு முக்கியமான பாகங்கள் அல்லது அமைப்புகள் உள்ளன. அவை: 

●கட்டமைப்பு அமைப்பு (Structural system) 

●பணிச்சுமை அமைப்பு (Payload system) 

●வழிகாட்டு அமைப்பு (Guidance system) 

●செலுத்தும் அமைப்பு (Propulsion system)

கட்டமைப்பு அமைப்பு:

■கட்டமைப்பு அமைப்பு என்பது ராக்கெட்டை உள்ளடக்கிய சட்டம் ஆகும். 

■இது மிகவும் வலிமையான, ஆனால் எடை குறைந்த டைட்டானியம் அல்லது அலுமினியம் போன்ற பொருள்களால் உருவாக்கப்படுகின்றது. ■பறக்கும்போது ராக்கெட் நிலையாக இருப்பதற்காக, சில ராக்கெட்டுகளின் அடிப்பகுதியில் துடுப்புகள் இணைக்கப்படுகின்றன.


பணிச்சுமை அமைப்பு:

■பணிச்சுமை என்பது சுற்று வட்டப்பாதையில் நிறுத்தப்படுவதற்காக ராக்கெட்டினால் சுமந்து செல்லப்படும் செயற்கைக்கோள்கள் ஆகும். ■இந்த பணிச்சுமையானது, ராக்கெட்டின் திட்டப் பணிகளைச் சார்ந்தது. ■தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, உளவு பார்த்தல், கோள்களை ஆராய்தல் மற்றும் கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு ஏற்றவாறு ராக்கெட்டுகளின் அமைப்பு மாற்றி அமைக்கப்படுகின்றது. 

■புவியின் சுற்று வட்டப் பாதைக்கு அல்லது நிலவின் மேற்பரப்பிற்கு மனிதர்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்றவாறும் சிறப்பு ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன.


வழிகாட்டு அமைப்பு:

■இந்த அமைப்பானது, ராக்கெட் செல்ல வேண்டிய பாதை குறித்து வழிகாட்டுகிறது. 

■இது உணர்விகள், கணினிகள், ரேடார் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.


உந்துவிசை அமைப்பு:

■ராக்கெட்டில் உள்ள பெரும்பகுதி இடத்தை இவ்வமைப்பே எடுத்துக் கொள்கிறது. 

■இது எரிபொருள் கலங்கள், இறைப்பான்கள் (Pumps) மற்றும் எரியூட்டும் அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

■இரண்டு முக்கியமான உந்துவிசை அமைப்புகள் உள்ளன. அவை 

-திரவ உந்துவிசை அமைப்பு மற்றும் 

-திட உந்து விசை அமைப்பு.3. நாசாவின் அப்போலோ திட்டங்கள் குறித்து குறிப்பு வரைக.


■ அப்போலோ விண்வெளித் திட்டங்களே நாசாவின் மிகப் புகழ்பெற்ற திட்டங்கள் ஆகும். 

■இவற்றின் மூலம், அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்கினர். 

■இது ஒட்டுமொத்தமாக 17 திட்டங்களைக் கொண்டது. இவற்றுள் அப்போலோ-8 மற்றும் அப்போலோ-11 ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை ஆகும். 

■ அப்போலோ-8 திட்டமே முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும். 

■ இதில், விண்கலம் நிலவைச் சுற்றிய பின் மீண்டும் பூமியை வந்தடைந்தது. 

■அப்போலோ-11 திட்டமானது முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்க செய்த திட்டம் ஆகும். 

■ அப்போலோ-11 விண்கலமானது, 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் நிலவில் தரையிறங்கியது. அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்தார்.


VII.  உயர்சிந்தனை வினாக்கள்


1. நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்கமுடிகிறது. ஏன்?


■ சந்திரன் தன்னைத்தானே அதன் அச்சில் முடிக்க எடுக்கும் நேரமும் பூமியை சுற்றி வர எடுக்கும் நேரமும் சமமாக இருக்கிறது, அதாவது அது எடுத்துக்கொள்ளும் நாட்கள் சுமார் 27 நாட்கள் ஆகும். இதன் விளைவாக, நாம் எப்போதும் சந்திரனின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.


Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்