வகுப்பு 6 ப1 இயல் ஒன்று கற்கண்டு வினா-விடைகள்

 
கற்கண்டு   

இயல் ஒன்று - தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் 


மதிப்பீடு


கொகுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்ப  சொற்களை எழுதுக


1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்​​​​​​​​​​​​​ இது.


2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச்சொல் ஈ.


3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் அஃது


குறுவினா


1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?


தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை


 • எழுத்து இலக்கணம், 

 • சொல் இலக்கணம்

 • பொருள் இலக்கணம்

 • யாப்பு இலக்கணம்

 • அணி இலக்கணம்

போன்றவை ஆகும்.


2. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.


 • க், ச், ட், த், ப், ற் - ஆகியவை வல்லினம்

 • ங், ஞ், ண், ந், ம், ன் - ஆகியவை மெல்லினம்

 • ய், ர், ல், வ், ழ், ள் - ஆகியவை இடையினம்


3. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.​​​​


மாத்திரை என்பது இங்கு கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.


 • குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை

 • நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை

 • மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை

 • ஆய்த எழுத்து ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை

Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8-அறிவியல்-அளவீட்டியல் வினா-விடைகள்

வகுப்பு 6 ப1 இன்பத்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 7 அறிவியல் அ1 அளவீட்டியல் வினா-விடைகள்