வகுப்பு 6 அறிவியல் அளவீடுகள் வினா விடைகள்

 அளவீடுகள்


மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப்பயன்படுவது

அ) மீட்டர் அளவு கோல்     ஆ) மீட்டர் கம்பி

இ) பிளாஸ்டிக் அளவுகோல்     ஈ) அளவு நாடா

விடை: ஈ) அளவு நாடா


2. 7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது

அ) 70 செ.மீ          ஆ) 7 செ.மீ

இ) 700 செ.மீ            ஈ) 7000 செ.மீ

விடை: இ) 700 செ.மீ


3. அளவிடப்படக்கூடிய அளவிற்கு _______ என்று பெயர்

அ) இயல் அளவீடு        ஆ) அளவீடு

இ) அலகு          ஈ) இயக்கம

விடை: அ) இயல் அளவீடு


4. சரியானதைத் தேர்ந்தெடு.

அ) கி.மீ > மி.மீ  > செ.மீ > மீ

ஆ)கி.மீ > மி.மீ  > செ.மீ > கி.மீ

இ) கி.மீ > மீ  > செ.மீ > மி.மீ

ஈ) கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

விடை: இ) கி.மீ > மீ  > செ.மீ > மி.மீ


5. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது, உனது கண்ணின் நிலை __________ இருக்க வேண்டும்.

அ) அளவிடும் புள்ளிக்கு இடதுபுறமாக

ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே,  செங்குத்தாக

இ) புள்ளிக்கு வலது புறமாக

ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

விடை: ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே,  செங்குத்தாக


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. SI அலகு முறையில் நீளத்தின் அலகு _____________

விடை: மீட்டர்


2. 500 கிராம் = _____________கிலோகிராம்.

விடை: 0.5 


3. டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு _____________ என்ற அலகால் அளவிடப்படுகிறது.

விடை: கிலோமீட்டர்


4. 1  மீ = _____________ செ.மீ.

விடை: 100


5. 5 கி.மீ = _____________ மீ.

விடை: 5000


III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

1. ஒரு பொருளின் நிறையை 126 கிகி எனக்கூறலாம்.

விடை: சரி


2. ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவு கோலைப் பயன்படுத்தி அளவிட முடியும்.

விடை: தவறு

ஒருவரின் மார்பளவை அளவு நாடாவைப் பயன்படுத்தி அளவிட முடியும்.


3. 10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.

விடை: சரி


4. முழம் என்பது நீளத்தை அளவிடப்பயன்படுத்தப்படும் நம்பகமான முறை

ஆகும்.

விடை: தவறு

முழம் என்பது நீளத்தை அளவிடப்பயன்படுத்தப்படும் நம்பகமற்ற, தோராயமான அளவீட்டு முறை ஆகும்.5. SI அலகு முறை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விடை: சரிIV. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக.

1. சர்க்கரை : பொதுத்தராசு :: எலுமிச்சைச்சாறு : _________________

விடை: அளவு சாடி


2. மனிதனின் உயரம் : செ.மீ :: கூர்மையானபென்சில் முனையின் நீளம் : _________

விடை: மி.மீ


3. பால் : பருமன் :: காய்கறிகள் : _____________

விடை: நிறைV. பொருத்துக.


முன்கையின் நீளம்

முழம்

நீளத்தின் SI அலகு

மீட்டர்

நானோ

10^-9

காலத்தின் SI அலகு

விநாடி

கிலோ

10^3 


VI. பின்வரும் அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக.


 1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.

விடை: 1 மில்லி மீட்டர்,  1 சென்டி மீட்டர், 1 மீட்டர், 1 கிலோ மீட்டர்


VII. ஓரிரு வார்த்தைகளில் விடை தருக.


1. SI என்பதன் விரிவாக்கம் என்ன?

விடை: பன்னாட்டு அலகுமுறை (System International)


2. நிறையை அளவிடப் பயன்படும் ஒரு கருவியைக் கூறு.

விடை: பொதுத்தராசு


3. பொருந்தாததைத் தேர்ந்தெடு.

கிலோகிராம், மில்லிமீட்டர், சென்டி மீட்டர், நானோ மீட்டர்

விடை: கிலோகிராம்


4. நிறையின் SI அலகு என்ன?

விடை: கிலோகிராம்


5. ஒரு அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் யாவை?

விடை: அலகு மற்றும் எண் மதிப்பு ஆகியவை அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் ஆகும்.


VIII. சுருக்கமாக விடையளி:

1. அளவீடு - வரையறு.


தெரிந்த ஒரு அளவுடன், தெரியாத ஒரு அளவை ஒப்பிடுவது ’அளவீடு’ எனப்படும். அளவீடு என்பது எண் மதிப்பு மற்றும் அலகு என இரண்டு

பகுதிகளைக் கொண்டது.2. நிறை - வரையறு.

நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும். நிறையின் S.I அலகு கிலோகிராம் ஆகும்.


3. இரு இடங்களுக்கிடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ. இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.

மீட்டரில் மாற்றிய பின் கிடைக்கும் தொலைவு = 43650மீ

சென்டிமீட்டரில் மாற்றியபின் கிடைக்கும் தொலைவு = 43,65,000செ.மீ


4. அளவுகோலைக்கொண்டு அளவிடும்போது, துல்லியமான அளவீட்டைப் 

பெறுவதற்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் யாவை?

 • எப்போதும் அளக்க வேண்டிய பொருளை , அளவுகோலுக்கு இணையாக வைத்துக் கணக்கிட வேண்டும்.

 • அளவீட்டை சுழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

 • சரியான துணைப் பன்மடங்குகளைக் குறிக்க வேண்டும்.

 • இடமாறு தோற்றப்பிழையைத் தவிர்க்க வேண்டும்.
IX.  கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக.

1. 10^-3 என்பது

விடை: மில்லிமீட்டர்

2. காலத்தின் அலகு

விடை: வினாடி

3. சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது

விடை: பிழை

4. கடிகாரம் காட்டுவது

விடை: மணி

5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு

விடை: நிறை

6. பல மாணவர்கள் அளவிட்ட ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் இறுதியான மதிப்பைப் பெறுவதற்கு எடுக்கப்படுவது.

விடை: சராசரி

7. ஒரு அடிப்படை அளவு

விடை: நீளம்

8. வாகனங்கள் கடக்கும் தொலைவைக் காட்டுவது

விடை: ஓடோமீட்டர்

9. தையல்காரர் துணியை அளவிடப் பயன்படுத்துவது

விடை: அளவுநாடா

10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு

விடை: லிட்டர்
X. கீழ்க்காண்பவற்றைத் தீர்க்க.


1. உனது வீட்டிற்கும் உனது பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு 2250மீ.

இந்தத் தொலைவினை கிலோமீட்டரில் குறிப்பிடுக.


வீட்டிற்கும், பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு =2250மீ

மீட்டரில் உள்ள அளவை கிலோமீட்டரில் மாற்ற = 2250 / 1000 = 2.25கி.மீ


2. கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும்போது ஒரு முனையின் அளவு 2.0 செ.மீ எனவும், மறு முனையின் அளவு 12.1 செ.மீ எனவும் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?


பென்சிலின் நீளமானது ‘0’ விலிருந்து அளவிடப்படவில்லை.

பென்சிலின் நீளத்தைக் கணக்கிட ஒரு முனையின் அளவான 12.1 செ.மீ இலிருந்து மறுமுனை அளவான 2.0 வை கழிக்க வேண்டும்.

= 12.1 - 2.0 

= 10.1செ.மீ


XI. விரிவாக விடையளி

1. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை

விளக்குக.

கம்பி அல்லது நூலைக் கொண்டு அளவிடுதல்:

 • ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைந்து, அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்க வேண்டும்.

 • கம்பியானது வளைகோட்டின் அனைத்துப் பகுதியையும் தொடுவதை

 • உறுதி செய்ய வேண்டும்.

 • வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்க வேண்டும்.

 • இப்பொழுது கம்பியை நேராக நீட்டி, குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப்புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிட வேண்டும்.

 • இதுவே வளைகோட்டின் நீளமாகும்.


கவையைப் (divider) பயன்படுத்தி அளவிடுதல்

 • ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரைந்து கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.

 • வளைகோட்டின் ஒரு முனையில் கவையை வைத்து அளவீட்டைத் தொடங்கி அதன் மறுமுனை வரை அளந்து குறிக்க வேண்டும். 

 • வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரித்து குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட வேண்டும்


வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை x ஒரு பாகத்தின் நீளம்) +

மீதம் உள்ள கடைசிப் பாகத்தின் நீளம்.2. கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.


பண்பு

வரையறை

அடிப்படை அலகு

அளவிடப்பயன்படும் கருவி

நீளம்

ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு

நீளம் எனப்படும்.

மீட்டர்

அளவுகோல்

நிறை

நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும்.

கிலோகிராம்

தராசு

பருமன்

ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அதன் பருமன் எனப்படும்.

மீட்டர்^2

அளவுசாடி

காலம்

இரண்டு நிகழ்வுகளுக்கிடையேயான கால அளவு.

வினாடி

கடிகாரம்


Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்