வகுப்பு 7 அறிவியல் அ1 அளவீட்டியல் வினா-விடைகள்

 



அலகு 1


அளவீட்டியல்

மதிப்பீடு


I.  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

அ) நிறை ஆ) நேரம் இ) பரப்பு ஈ) நீளம்

விடை: இ) பரப்பு


2.. பின்வருவனவற்றுள் எது சரி?

அ) 1L = 1cc ஆ) 1L = 10 cc இ) 1L = 100 cc ஈ) 1L = 1000 cc

விடை: ஈ) 1L = 1000 cc


3. அடர்த்தியின் SI அலகு

அ) கிகி / மீ2 ஆ) கிகி / மீ3 இ) கிகி / மீ ஈ) கி / மீ3

விடை: ஆ) கிகி / மீ3


4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

அ) 1:2 ஆ) 2:1   இ) 4:1 ஈ) 1:4

விடை: ஆ) 2:1


5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

அ) தொலைவு ஆ) நேரம் இ) அடர்த்தி ஈ) நீளம் மற்றும் நேரம்

விடை: அ) தொலைவு


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை அளக்க ______________ விதி பயன்படுகிறது.

விடை: ஆர்க்கிமிடிஸ்


2. ஒரு கன மீட்டர் என்பது __________ கன சென்டிமீட்டர்.

விடை: 10,00,00 அல்லது 106


3. பாதரசத்தின் அடர்த்தி ​​​​​.

விடை: 13,600கிகி/மீ3


4. ஒரு வானியல் அலகு என்பது ____________.

விடை: 1.496 X 1011மீ


5. ஓர் இலையின் பரப்பை ____________​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​ பயன்படுத்தி கணக்கிடலாம்.

விடை: வரைபடம்


III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

1. ஒரு பொருளின் எல்லை அடைத்துக்கொள்ளும் இடமே அப்பொருளின் பரப்பளவு ஆகும்.

விடை: சரி


2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

விடை: சரி


3. நீர் மண்ணெண்ணெயை விட அதிக அடர்த்தி கொண்டது.

விடை: சரி


4. இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

விடை: சரி


5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.

விடை: தவறு 

ஓரலகு பருமனில் அதிக எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.


IV. பொருத்துக:

அ.


பரப்பு

மீ2

தொலைவு

ஓளி ஆண்டு

அடர்த்தி

கிகி / மீ3

கன அளவு

மீ3

நிறை 

கிகி



ஆ.


பரப்பு 

தள வடிவ பொருள்

நீளம்

கயிறு

அடர்த்தி

கி / செமீ3

கன அளவு

அளவிடும் முகவை

நிறை 

பொருளின் அளவு


V.  பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்.

1. 1 L, 100 cc, 10 L, 10 cc

விடை: 10 cc,100 cc, 10 L,1 L


2. தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு

விடை: அலுமினியம், இரும்பு,தாமிரம், தங்கம்


VI. ஒப்புமையைக் கொண்டு நிரப்புக.

1. பரப்பு : மீ2 :: கன அளவு :____________

விடை: மீ3


2. திரவம் : லிட்டர் :: திடப்பொருள் : __________

விடை: கிலோகிராம்


3. நீர் : மண்ணெண்ணெய் :: ____________ : அலுமினியம்

விடை: தாமிரம்


VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க.


அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.


1. கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

விடை: அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.


2. கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும்.

காரணம்: நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

விடை: ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.


3. கூற்று: ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.

காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

விடை: இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.


VIII. மிகச் சுருக்கமாக விடையளி.

1. ஒருசில வழி அளவுகளைக் கூறுக.

விடை: பரப்பளவு, அடர்த்தி, பருமன் போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டாகும்.


2. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.

விடை: 

1 ஒளி ஆண்டு = 9.46×1015 மீ


3. ஓர் உருளையின் கனஅளவைக் காண உதவும் சூத்திரத்தை எழுதுக.

விடை: 

உருளையின் கனஅளவு = πr2h


4. பொருள்களின் அடர்த்தியைக் காண்பதற்கான வாய்ப்பாட்டைத் தருக.

விடை: 

அடர்த்தி = நிறை / கன அளவு


5. எந்தத் திரவத்தில் இரும்பு மூழ்கும்?

விடை: 

தண்ணீர்

இரும்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட அதிகமாக இருப்பதால், இரும்பு தண்ணீரில் மூழ்கும்.


6. வானியல் பொருள்களின் தொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.

விடை: 

வானியல் அலகு

ஒளி ஆண்டு

போன்றவை வானியல் பொருள்களின் தொலைவைக் காண உதவும் அலகுகளாகும்.


7. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?

விடை: 

தங்கத்தின் அடர்த்தி = 19,300கிகி/மீ3


IX. சுருக்கமாக விடையளி.

1. வழி அளவுகள் என்றால் என்ன?

அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.



2.ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.

.

திரவங்களின் கனஅளவு

கலனின் கொள்ளளவு

திரவத்தின் கன அளவு என்பது அது கலனில் எவ்வளவு இடத்தை நிரப்புகிறது என்பதாகும்

ஒரு கொள்கலன் அடைத்துக் கொள்ளக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கலனின் கொள்ளளவு எனப்படுகிறது.



3. பொருள்களின் அடர்த்தியை வரையறு.

ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு பருமனில் (1 மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறை என்று வரையறுக்கப்படுகிறது.

அடர்த்தி (D) = நிறை (M) /பருமன் (V)


4. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?

ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவவு ஆகும்.

1 ஒளி ஆண்டு = 9.46 × 1015 மீ


5. ஓரு வானியல் அலகு - வரையறு.

ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.

1 வானியல் அலகு = 149.6 மில்லியன் கிமீ



X. விரிவாக விடையளி.


1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத்தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.


  • ஒரு இலையை ஒரு வரைபடத்தாளின் மீது வைத்து, அதன் எல்லையை ஒரு பென்சிலைக் கொண்டு வரைந்து கொள்ளவும்.

  • இலையின் எல்லைக் கோட்டிற்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணவும். இதனை, M எனக் கொள்ளவும்.

  • பாதியளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணவும். இதனை, N எனக் கொள்ளவும்.

  • பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணவும். இதனை, P எனக் கொள்ளவும்.

  • பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணவும். இதனை, Q எனக் கொள்ளவும்.

இப்போது, இலையின் பரப்பளவினை தோராயமாக பின்வரும் சூத்திரத்தின் மூலம் கண்டறியலாம்.


இலையின் தோராயமான பரப்பு = M + 3/4 N + 1/2 P + 1/4 Q சதுர செ.மீ

இலையின் பரப்பு = -__________ செமீ2.


2. ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?

  • ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும் . நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிடை V1 எனக் குறிக்கவும்.

  • ஒரு சிறிய கல்லை எடுத்து, அதை ஒரு நூலினால் கட்டவும். 

  • நூலைப் பிடித்துக்கொண்டு, கல்லை நீரினுள் மூழ்கச்செய்யவும். 

  • கல்லை மூழ்கச்செய்யும்போது, கல் குவளையின் சுவர்களைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

  • கல் மூழ்கும் பொழுது, குவளையில் நீரின் மட்டம் உயர்ந்திருக்கும்.

  • நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். அதனை V2 எனக் குறிக்கவும். 


கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமம்.

கல்லின் கனஅளவு = V2 – V1



XI. கணக்கிடுக.


1. ஒரு வட்ட வடிவத் தட்டின் ஆரம் 10 செமீ எனில், அதன் பரப்பை சதுரமீட்டரில் காண்க. (π = 22/7 எனக் கொள்க).

ஆரம் = 10 செ.மீ (மீட்டராக மாற்றக் கிடைப்பது 0.1 மீ)

π = 3.14

பரப்பு = ?

வட்டத்தின் பரப்பளவு  = π × r2

= 3.14 X 0.1 X 0.1

= 0.0314மீ2


2. ஒரு பள்ளியின் விளையாட்டுத் திடலின் பரிமாணம் 800 மீ × 500 மீ. அத்திடலின் பரப்பைக் காண்க.


பரப்பளவு = நீளம் X அகலம்


பள்ளியின் விளையாட்டுத் திடலின் பரிமாணம் = நீளம் X அகலம்

= 800 மீ X 500 மீ

= 4,00,000மீ2


3. ஒரே அளவுடைய இரு கோளங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நிறைகளின் விகிதத்தைக் காண்க (தாமிரம் மற்றும் இரும்பின் அடர்த்தி முறையே 8900 கிகி / மீ3 மற்றும் 7800 கிகி / மீ3).


தாமிரத்தின் அடர்த்தி = 8900கிகி/மீ3

இரும்பின் அடர்த்தி = 7800கிகி/மீ3


நிறை= அடர்த்தி X கன அளவு

M = D X V

தாமிரத்தின் நிறை = தாமிரத்தின் அடர்த்தி X தாமிரத்தின் கன அளவு


இரும்பின் நிறை = இரும்பின் அடர்த்தி X இரும்பின் கன அளவு


இரும்பு மற்றும் தாமிரத்தின் கன அளவு சமம் எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

Vfe = Vcu

V = M/D

Mfe/Dfe = Mcu/Dcu

Mfe/Mcu = 8900/7800

= 1.141

நிறைகளின் விகிதம் = 1.1.41 கி/ மீ3


4. 250 கி நிறையுள்ள ஒரு திரவம் 1000 கன செ.மீ இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தியைக் காண்க.

திரவத்தின் நிறை = 250 கி

பருமன்      = 1000 cc

திரவத்தின் அடர்த்தி = ?


    அடர்த்தி = நிறை/ பருமன்

=250 / 1000

=0.25 கி/மீ3



5. 1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க (π = 22/7 எனக் கொள்க).

கோளத்தின் ஆரம் = 1 செமீ

கோளத்தின் நிறை = 33 கி

கோளத்தின் அடர்த்தி = ?


அடர்த்தி = நிறை / பருமன்


பருமன் கொடுக்கப்படாததால், முதலில் பருமனைக் கணக்கிடவேண்டும்.


கோளத்தின் பருமன் = 4/3 π r3

     =4/3 X 3.14 X 1 X !

    =4.187

அடர்த்தி = நிறை/ பருமன்

    = 33 / 4.187

= 7.889 கி/ செ.மீ3

வெள்ளியின் அடர்த்தி = 7.889 கி/ செ.மீ3


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்