வகுப்பு 6 ப1 இ2 கற்கண்டு முதலெழுத்தும் சார்பெழுத்தும்





இயல் இரண்டு 

கற்கண்டு - முதலெழுத்தும் சார்பெழுத்தும்


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன ? 

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.


2.சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். 

1. உயிர்மெய் 

2. ஆய்தம் 

3. உயிரளபெடை 

4. ஒற்றளபெடை 

5. குற்றியலிகரம் 

6. குற்றியலுகரம் 

7. ஐகாரக்குறுக்கம் 

8. ஒளகாரக்குறுக்கம்

9. மகரக்குறுக்கம் 

10. ஆய்தக்குறுக்கம்


3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் உடைய ஆய்த எழுத்தானது, தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனித்து இயங்காது.

 

Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 6 ப1 இன்பத்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 6 அறிவியல் அளவீடுகள் வினா விடைகள்

8-அறிவியல்-அளவீட்டியல் வினா-விடைகள்