வகுப்பு 6 ப1 இ3 உரைநடை-கணியனின் நண்பன் வினா-விடைகள்







இயல் மூன்று

உரைநடை -கணியனின் நண்பன்



மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1.நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________.

அ) நூலறிவு 

ஆ) நுண்ணறிவு 

இ) சிற்றறிவு 

ஈ) பட்டறிவு

விடை: ஆ) நுண்ணறிவு


2.தானே இயங்கும் எந்திரம் _______________.

அ) கணினி 

ஆ) தானியங்கி 

இ) அலைபேசி 

ஈ) தொலைக்காட்சி

விடை: ஆ) தானியங்கி 


3.'நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

அ) நின் + றிருந்த  

ஆ) நின்று + இருந்த  

இ) நின்றி + இருந்த  

ஈ) நின்றி + ருந்த

விடை: ஆ) நின்று + இருந்த 


4.’அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

அ) அவ்வு + ருவம் 

ஆ) அ + உருவம் 

இ) அவ் + வுருவம் 

ஈ) அ + வுருவம்

விடை: ஆ) அ + உருவம் 


5.மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_________

அ) மருத்துவம்துறை  

ஆ) மருத்துவதுறை  

இ) மருந்துதுறை  

ஈ) மருத்துவத்துறை

விடை: ஈ) மருத்துவத்துறை


6.செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________

அ) செயலிழக்க 

ஆ) செயல்இழக்க 

இ) செயஇழக்க 

ஈ) செயலிலக்க

விடை: அ) செயலிழக்க 


7.நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------------

அ) போக்குதல்  

ஆ) தள்ளுதல்  

இ) அழித்தல்  

ஈ) சேர்த்தல்

விடை: ஈ) சேர்த்தல்


8.எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------------

அ) அரிது 

ஆ) சிறிது 

இ) பெரிது 

ஈ) வறிது

விடை: அ) அரிது


கோடிட்ட இடங்களை நிரப்புக.

 1.மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை _____________

விடை: எந்திரங்கள்


2.தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு __________________

விடை: செயற்கை நுண்ணறிவு


3.உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ______

விடை: டீப் ப்ளூ


4. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு _________________

விடை: சவுதி அரேபியா


சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1.தொழிற்சாலை

நாட்டின் வளர்ச்சிகளுக்கு தொழிற்சாலைகளும் அவசியம்.


2.உற்பத்தி

தேவைக்கு அதிகமான உற்பத்தி அவசியமற்றது.


3.ஆய்வு

விவசாயத்தில் ஆய்வு அதிகம் அவசியம்.

4.செயற்கை

செயற்கை உரங்கள் நிலத்தை மாசுபடுத்தும்.



5.நுண்ணறிவு

நமது செயல்களில் நுண்ணறிவுடன் செயல்பட வேண்டும்.



குறுவினா

1. ’ரோபோ’ என்னும் சொல் எவ்வாறு உருவானது?

காரல் சேபக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சார்ந்தெ நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆணடு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும்  சொல்லை முதன் முதன்முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பதுபொருள். இவ்வாறாக ரோபோ என்ன்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது. 


2.‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.

ஐ.பி.எம் என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி, 1997-ஆம் ஆணடு மே மாதம் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவருடன் போட்டியிட்டு  வெற்றி பெற்றது. 


சிறுவினா

1.எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.

இன்றைய நவீன உலகில், எந்திரமனிதன் பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. அலுவலக வேலைகளில் ஆரம்பித்து, மருத்துவத்துறை, பாதுகாப்புத்துறை போன்ற பல துறைகளிலும் பயன்படுகிறது. தற்பொழுது, உணவகங்களில் உணவு பரிமாறவும், கொரோனா நோய்த்தொற்று சமயங்களில் நோயாளிகளுக்கு மருந்து, உணவு போன்றவற்றை மருத்துவமனை அறைகளில் சென்று வினியோகம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது.


2.துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?

துருவப்பகுதிகளில், வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும், அங்கு மனிதர்கள் நீண்ட காலம் ஆய்வு செய்ய இயலாது. அதே சமயம்,  எந்திரமனிதர்கள் நீண்ட காலம் துருவப்பகுதிகளில் தங்கி இருந்து ஆய்வு செய்ய இயலும்.


சிந்தனை வினா

உங்களுக்கென ஒரு எந்திரமனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள் எனச் சிந்தித்து எழுதுக.


கழிவு நீர் மேலாண்மையில், மனிதர்கள் வேலை செய்ய சிரமப்படுவதால், அங்கு பயன்படுத்துவேன்.

ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தடுக்க எந்திரமனிதனைப் பயன்படுத்துவேன்.

வீட்டு வேலைகள் செய்ய, அம்மா சிரமப்படுவதால், அம்மாவிற்கு உதவியாக எந்திர மனிதனை பயன்படுத்துவேன்.

 

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

வகுப்பு 6 ப1அ5 அறிவியல் விலங்குலகம் வினா-விடைகள்