வகுப்பு 6 ப1 இ3 கற்கண்டு மொழி முதல் இறுதி எழுத்துகள் வினா விடைகள்




இயல் மூன்று

கற்கண்டு - மொழி முதல், இறுதி எழுத்துகள்



மதிப்பீடு


1. மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை? 


சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் மொழிமுதல் எழுத்துகள் ஆகும்.

  • க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்

  • ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- ஙனம்

  • ஞ - வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். 

  • ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். 

  • வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும



2. மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை? 


  • சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை. 

  • ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது. 

  • க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை. உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.


3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துகள் எவை? 


  • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும். 

  • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். 

  • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்