அலகு 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது? அ. ஒற்றுமை ஆ. வேறுபாடு இ. இரண்டும் ஈ. எதுவும் இல்லை விடை: இ. இரண்டும் 2. ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை அ. 8.7 மில்லியன் ஆ. 8.6 மில்லியன் இ. 8.5 மில்லியன் ஈ. 8.8 மில்லியன் விடை: அ. 8.7 மில்லியன் 3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு அ. வரிசை ஆ. பேருலகம் இ. தொகுதி ஈ. குடும்பம் விடை: ஆ. பேருலகம் 4. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது? அ. அரிஸ்டாட்டில் ஆ. லின்னேயஸ் இ. விட்டேக்கர் ஈ. பிளேட்டோ விடை: இ. விட்டேக்கர் 5. புறாவின் இருசொற் பெயர் அ. ஹோமோ செப்பியன் ஆ. ராட்டஸ் ராட்டஸ் இ. மாஞ்சிபெரா இண்டிகா ஈ. கொலம்பா லிவியா விடை: ஈ. கொலம்பா லிவியா II கோடிட்ட இடங்களை நிரப்புக 1. ____________ 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார். விடை: காஸ்பார்டு பாஹின் 2. சிற்றினம் என்பது ____________ வகைப்பாட்டின் நிலை ஆகும். விடை: 3. ____________ பச்...