வகுப்பு 8 சஅ பொ1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் வினா விடைகள்

 

அலகு - 1

   பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்>>>


மதிப்பீடு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. சமயச்சார்பின்மை என்பது

1. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?

அ) தங்கம் ஆ) வெள்ளி

இ) வெண்கலம் ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்

2. இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர் யார்?

அ) உதயகுமார் ஆ) அமர்த்தியா சென்

இ) அபிஜித் பானர்ஜி ஈ) இவற்றில் எவரும் இல்லை

விடை: அ) உதயகுமார்

3. பணத்தின் மதிப்பு

அ) அக பணமதிப்பு ஆ) புற பண மதிப்பு

இ) அ மற்றும் ஆ ஈ) எதுவுமில்லை

விடை: இ) அ மற்றும் ஆ

4. வங்கி பணம் என்பது எது?

அ) காசோலை

ஆ) வரைவு

இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை: அ) காசோலை

5. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்

அ) பங்கு வர்த்தகம்ஆ) பத்திரங்கள்

இ) பரஸ்பர நிதி ஈ) வரி செலுத்துவது

விடை:  ஈ) வரி செலுத்துவது

6. பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்

அ) வரி ஏய்ப்பவர்கள்

ஆ) பதுக்குபவர்கள்

இ) கடத்தல்காரர்கள்

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை: அ) வரி ஏய்ப்பவர்கள்

II   கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.

விடை: இணைய வங்கி

2. பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே _________.

விடை: பணம்

3. மின்னணு வங்கியை _________ என்றும் அழைக்கலாம்.

விடை:  தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)

4. கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் _________ பணமாகும்.

விடை: நெகிழி

5. இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________

விடை: 1949


III பொருத்துக


பண்டமாற்று முறை

பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்

1935

மின் – பணம்

மின்னணு பணம்

சேமிப்பு

நுகர்வு தவிர்த்த வருமானம்

கருப்பு பணம்

வரி ஏமாற்றுபவர்கள்


IV   கீழ்க்கண்ட வினாக்களுக்கு ஓரிரு வார்த்தையில் விடையளி

1. ‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?

பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான “மொனேட்டா ஜுனோ” விலிருந்து பெறப்பட்டது.

2. இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுவது யார்?

இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுவது இந்திய ரிசர்வ் வங்கி.


V சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன

I. இருமுகத்தேவை பொருத்தமின்மை

II. செல்வத்தை சேமிக்க சிரமமில்லை

III. பொதுவான மதிப்பின் அளவுகோல்

IV. பொருட்களின் பகுபடாமை

அ) I மற்றும் II சரி

ஆ) I மற்றும் IV சரி

இ) I, III மற்றும் IV சரி

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை: இ) I, III மற்றும் IV சரி



VI தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

1. பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

அ) பற்று அட்டை ஆ) பண்டமாற்று முறை

இ) கடன் அட்டை ஈ) நிகழ் நிலை வங்கி

விடை: ஆ) பண்டமாற்று முறை


2. பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்

அ) இரட்டை பொருளாதாரம்

ஆ) சமத்துவம் வலுவிழத்தல்

இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை

ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு

விடை: இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை


VII  கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

1. பண்டமாற்று முறை என்றால் என்ன?

பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தபடாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை எனப்படும்.

2. அண்மை கால பணத்தின் வடிவங்கள் யாவை?

  • நெகிழிப் பணம்

  • மின்னனு பணம்

  • நிகழ் நிலை வங்கி

  • மின் வங்கி

3. மின் – வங்கி மற்றும் மின் – பணம் – சிறு குறிப்பு வரைக.

மின் வங்கி 

மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு க ண க் கி லி ரு ந் து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.

மின்னனு பணம் 

மின்னனுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும

4. பணத்தின் மதிப்பு என்றால் என்ன?

பணத்தின் மதிப்பு என்பது பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்.

இது பண்ட மற்றும் பணிகளின் விலை அளவை சார்ந்திருக்கும். ஆனால் பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் எதிர்மறை தொடர்புடையது.


5. சேமிப்பு மற்றும் முதலீடு என்றால் என்ன?

வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பு என வரையறு க்கப்படுகிறது. இது தற்போதைய நுகர்வுக்காக பயன்படுத்தபடாமல் எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படுகிறது.

முதலீடு என்பது மூலதன சொத்துக்களில் நிதி முதலீடு செய்யும் செயல்முறையை குறிக்கிறது.

பணம், நேரம், முயற்சிகள் அல்லது பிற மூலங்களில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி முதலீடு செய்து அதற்கு மாற்றாக எதிர்காலத்தில் வருமானமாக திரும்பப்பெறுவதாகும்.


6. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

கருப்புப் பணம் என்பது கணக்கில் க ொ ண் டுவர ாத பணத்தின் ஒரு வடிவமாகும். 

இது பெரும்பாலும் வணிக மக்களால் ஈட்டிய வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதற்காக வருமானத்தின் ஒரு பகுதியை மட்டுமே கணக்கில் காட்டுவதால் உண்டாகிறது.


7. பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?

  • பொருளாதாரத்தில் ஒருபுறம் வளர்ச்சியும் மறுபுறம் வளர்ச்சியற்ற நிலை ஏற்பட்டு இரட்டை பொருளாதாரத்தை உருவாக்கும். 

  • உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது

  • வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு 

  • சமத்துவம் வலுவிழத்தல் 

  • பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல் 

  • ஆடம்பர நுகர்வு செலவு 

  • உற்பத்தி முறையில் விலகல் 

  • பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல் 

  • சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள் 

  • உற்பத்தி மீதான விளைவுகள்


VIII  விரிவான விடையளி

1. பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?

1. இருமுகத் தேவை பொருத்தமின்மை

2. பொதுவான மதிப்பின் அளவுகோல்

3. பொருட்களின் பகுபடாமை

4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்


2. பணத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி எழுதுக.

பணத்தின் பரிணாம வளர்ச்சியின் பல நிலைகள் பின்வருமாறு பண்டப் பணம், உலோக பணம், காகித பணம், கடன் பணம், நிகர் பணம் போன்றவைகள் சமீப கால பணத்தின் வடிவங்கள் ஆகும். காலம், இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பணம் பல நிலைகளில் உருவானது. 

பண்டப் பணம் 

பொதுவாக நாகரீகத்தின் தொடக்க காலத்தில் அனைவராலும் ஏற்கக்கூடிய எந்த பண்டம் பொதுவாக தேவைப்படுகிறதோ அந்தப் பண்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை பணமாக பயன்படுத்தினர். 

உலோக பணம் 

மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் பண்ட பணம், உலோக பணமாக மாறியது. தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள் முக்கிய பங்கு வகித்தது. 

காகித பணம்

தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சிரமமாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது. ஆகையால், காகித பணம் கண்டுபிடிப்பு பணத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிலையாக கருதப்பட்டது. 

கடன் பணம் அல்லது வங்கிப் பணம்

காசோலை கடன் பணம் அல்லது வங்கிப் பணம் என்றும் அழைக்கப்படுகிறது. காசோலை என்பது பணத்தைக் குறிப்பதல்ல. ஆனால் பணத்தின் பணிகளை மேற்கொள்ளும். 

நிகர் பணம் உண்டியல், கருவூலக பட்டியல், பத்திரம், கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் பண பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும். 

3. பணத்தின் பணிகள் யாவை? அவற்றை விளக்குக.

முதன்மை அல்லது முக்கிய பணிகள்


பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை

பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.


மதிப்பின் அளவுகோல்

அனைத்து மதிப்பையும் பணத்தால் அளவிடலாம். பலவகையான பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இடையில் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிப்பது எளிது.


இரண்டாம் நிலை பணிகள்

இரண்டாம் நிலை பணிகளில் முக்கிய மூன்று முக்கிய பணிகள்


(i) எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு

எதிர்கால செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. இன்று ஒரு கடனாளி கடன் வாங்குகிறார்.

குறிப்பிட்ட தொகையை கூறிய படி குறிப்பிட்ட காலத்தில் செலுத்துவது கடமையாகும்.

(ii) மதிப்பின் நிலை கலன் அல்லது வாங்கும் சக்தியின் நிலைகலன் 

சில பண்டங்கள் அழிந்து போகக்கூடியதால், பண்டமாற்று முறையில் சேமிப்பை ஊக்குவிப்பதில்லை.

பணத்தின் அறிமுகத்திற்கு பிறகு எதிர்காலத்திற்காகப் பணத்தை சேமித்தார்கள்.

அது அழிய கூடியதில்லை.

(iii) மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி

பணத்தால் தொலைதூர இடங்களுக்கும், வெளி நாட்டிற்கும் பண்டங்களை பரிமாற்றம் செய்ய முடியும்.

ஆகவே, வாங்கும் சக்தியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அவசியம் என உணரப்பட்டது


4. வங்கி வைப்புகளின் வகைகளை விவரி.

1. மாணவர் சேமிப்பு கணக்கு 

சில வங்கிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்புக் கணக்கினை துவங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்தி வழங்குகின்றன. மேலும்,பூஜ்ய இருப்பினை கொள்வது இதன் முக்கிய அம்சமாகும். 

2. சேமிப்பு வைப்பு 

வாடிக்கையாளர்கள் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு சேமிப்பு கணக்கு எனப்படும். நுகர்வோர், பணம் தேவைப்படும் போது அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.அந்த வைப்பு தொகைக்கு வங்கி பெயரளவு வட்டி அளிக்கிறது. 

3. நடப்பு கணக்கு 

வைப்பு நடப்பு கணக்குகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது. 

4. நிரந்தர வைப்பு 

நிரந்தர வைப்பு கணக்கு என்பது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருவாயும், விரும்புவார்கள். நிரந்தர வைப்பை ‘காலவைப்பு’ எனவும் அழைக்கலாம். 


5. சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?


ஒப்பீட்டின் அடிப்படை

சேமிப்பு

முதலீடு

பொருள்

சேமிப்பு என்பது தனிநபர் வருமானத்தில் நுகர்விற்காக பயன்படுத்தப்படாத ஒரு பகுதியேயாகும்.

முதலீடு என்பது மூலதன சொத்துக்களில் நிதி முதலீடு செய்யும் செயல்முறையை குறிக்கிறது.

நோக்கம்

சேமிப்பு குறுகிய கால அல்லது அவசரகால தேவைகளை நிறைவேற்றும்

மூலதன உருவாக்கத்திற்கும், வருவாய்க்கும் முதலீடு உதவுகிறது.

இடர்பாடு

குறைந்த அல்லது புறக்கணிக்கப்பட்ட அளவு

மிக அதிகம் 

வருவாய்

இல்லை அல்லது குறைவு

ஒப்பீட்டளவில் அதிகம்

நீர்மை நன்மை

அதிக நீர்மை

குறைந்த நீர்மை



6. பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?

  • பொருளாதாரத்தில் ஒருபுறம் வளர்ச்சியும் மறுபுறம் வளர்ச்சியற்ற நிலை ஏற்பட்டு இரட்டை பொருளாதாரத்தை உருவாக்கும். 

  • உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது

  • வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு 

  • சமத்துவம் வலுவிழத்தல் 

  • பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல் 

  • ஆடம்பர நுகர்வு செலவு 

  • உற்பத்தி முறையில் விலகல் 

  • பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல் 

  • சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள் 

  • உற்பத்தி மீதான விளைவுகள்

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்