வகுப்பு6 ப1இ2 தமிழ் உரைநடை உலகம் -சிறகின் ஓசை

இயல் இரண்டு 

உரைநடை உலகம் - சிறகின் ஓசைசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.’தட்பவெப்பம் ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) தட்பம் + வெப்பம் 

ஆ) தட்ப + வெப்பம்

இ) தட் + வெப்பம்

ஈ)தட்பு + வெப்பம்

விடை: அ) தட்பம் + வெப்பம் 


 2. ’வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) வேதி + யுரங்கைள் 

ஆ) வேதி + உரங்கள்

இ) வேத்+ உரங்கைள் 

ஈ) வேதியு + ரங்கைள்

விடை: ஆ) வேதி + உரங்கள்


 3. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

அ) தரையிறங்கும்

ஆ) தரைஇறங்கும் 

இ) தரையுறங்கும்

ஈ) தரைய்றங்கும்

விடை: அ) தரையிறங்கும்

4. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

அ) வழிதடம் 

ஆ) வழித்தடம் 

இ) வழிதிடம் 

ஈ) வழித்திடம்

விடை: ஆ) வழித்தடம் 


5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.

அ) துருவப்பகுதி 

ஆ) இமயமலை 

இ) இந்தியா 

ஈ) தமிழ்நாடு

விடை: அ) துருவப்பகுதி 


கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ________________.

விடை: ஆர்டிக் ஆலா


2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ________________.

விடை: சக்தி முத்துப்புலவர்


3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ________________ என்று பெயர்.

விடை: வலசை போதல்


4. இந்தியாவின் பறவை மனிதர் ________________.

விடை: சலீம் அலி


5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று ________________.

விடை: தட்ப வெப்ப நிலை மாற்றம்


சொற்றொடர் அமைத்து எழுதுக.

1. வெளிநாடு__________________________________________

விடை: வளவனுக்கு வெளிநாடு சென்று பணி செய்ய வேண்டுமென்பது விருப்பம்.


2. வாழ்நாள்__________________________________________

விடை: புதிது புதிதாகக் கற்றுக் கொள்வதை வாழ்நாள் முழுவதும் கடை பிடிக்க வேண்டும்.


3. செயற்கை__________________________________________

விடை: செயற்கை உரங்கள் நிலத்திற்குத் தீமையானது என்பதை அழகன் உணர்ந்தான்.


பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.

1. மரங்களை வளர்த்து இயற்கையைக் காப்போம் செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். 


2. தமிழகத்தில் வலசைப் பறவைககளின் வருகை மிகுந்துள்ளது தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


குறுவினா

1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.


2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

  • தலையில் சிறகு வளர்தல்

  • இறகுகைளின் நிறம மாறுதல்

  • உடலில் கற்றையாக முடி வளர்தல்


சிறுவினா

1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.

சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது

கூடு கட்டும் காலங்களில் சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்

கூடு கட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும்.

14 நாட்கள் அடை காட்கும்

15-ஆம் நாள் குஞ்சுகள் வெளிவரும்.

துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. 

இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். 

இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.


2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. 

நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. 

பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன. 

பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத்தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. 

சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. 

சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.  


சிந்தனைவினா

பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

  • ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை , புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும். 

  • நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.

  • தோட்டங்களிலும் வயல்வெளிகளி லும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

Popular posts from this blog

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 அறிவியல் நீர் மதிப்பீடு வினா விடைகள்