8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்

 

அன்றாட வாழ்வில் வேதியியல்


மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் _____________.

அ) மெத்தனால்

ஆ) எத்தனால்

இ) கற்பூரம்

ஈ) மெர்காப்டன்

விடை: ஈ) மெர்காப்டன்


2. தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?

அ) சதுப்பு நில வாயு

ஆ) நீர்வாயு

இ) உற்பத்தி வாயு

ஈ) நிலக்கரி வாயு

விடை: ஆ) நீர்வாயு


3. ஒரு எரிபொருளின் கலோரி மதிப்பின் அலகு

அ) கிலோ ஜுல்/மோல்

ஆ) கிலோ ஜுல்/கிராம்

இ) கிலோ ஜுல்/கிலோ கிராம்

ஈ) ஜுல்/கிலோ கிராம்

விடை: இ) கிலோ ஜுல்/கிலோ கிராம்


4. __________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.

அ) பீட் 

ஆ) லிக்னைட்

இ) பிட்டுமினஸ் 

ஈ) ஆந்த்ரசைட்

விடை: ஈ) ஆந்த்ரசைட்


5. இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ___________

அ) மீத்தேன் 

ஆ) ஈத்தேன்

இ) புரோப்பேன்

 ஈ) பியூட்டேன்

விடை: அ) மீத்தேன்


II. கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.


1. உற்பத்தி வாயு என்பது, ___________ மற்றும் ___________ ஆகியவற்றின் கலவையாகும். 

விடை: கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன்


2. ___________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது.

விடை: மீத்தேன் 


3. பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது ________.

விடை: பாறை 


4. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது___________ எனப்படும்.

விடை: சிதைத்து வடித்தல்


5. படிம எரிபொருளுக்கு ஒரு உதாரணம்

விடை: நிலக்கரி


III. பொருத்துக.



ஆக்டேன் மதிப்பீடு

டீசல்

சீட்டேன் மதிப்பீடு

மீத்தேன்

எளிய ஹைட்ரோகார்பன்

பெட்ரோல்

பீட்

பழுப்புநிறம் கொண்டது

லிக்னைட்

முதல் நிலை நிலக்கரி


விடை: 



ஆக்டேன் மதிப்பீடு

பெட்ரோல்

சீட்டேன் மதிப்பீடு

டீசல்

எளிய ஹைட்ரோகார்பன்

மீத்தேன்

பீட்

முதல் நிலை நிலக்கரி

லிக்னைட்

பழுப்புநிறம் கொண்டது 


IV. சுருக்கமாக விடையளி.


1. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன?


ஹைட்ரோகார்பன்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்தப் பண்பு சங்கிலித் தொடராக்கம் (கேட்டினேஷன்) எனப்படும். 



2. இயற்கை வாயுவின் நிறைகள் யாவை?


⚫ இயற்கை வாயு எளிதில் எரியக்கூடியது என்பதால், இது பெருமளவில் வெப்பத்தை வெளியிடுகிறது. 

⚫ எரியும்பொழுது எந்தக் கழிவையும் இது தருவதில்லை. 

⚫ எரியும்பொழுது புகையை வெளிவிடாததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை. 

⚫ இந்த வாயுவை குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச் சென்று சேர்க்க முடியும்.

⚫ இதனை வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.


3. CNG என்பதை விரிவு படுத்தி எழுதுக. அதன் இரு பயன்களை எழுதுக.


CNG - COMPRESSED NATURAL GAS- அழுத்தப்பட்ட இயற்கை வாயு


◼ அதிக அழுத்தம் கொண்டு இயற்கை வாயுவை அழுத்தும்பொழுது அழுத்தப்பட்ட இயற்கை வாயு (CNG) கிடைக்கிறது.


◼ CNG மிகவும் மலிவான மற்றும் தூய்மையான எரிபொருள். 

◼ CNG யை பயன்படுத்தும் வாகனங்கள் மிகக் குறைவான கார்பன் டைஆக்சைடையும், ஹைட்ரோகார்பன் புகையையும் வெளியிடுகின்றன. 

◼ பெட்ரோல் மற்றும் டீசலை விட மிகவும் விலை குறைந்தது.


4. தொகுப்பு வாயு என்று அறியப்படும் வாயுவைக் கண்டறிந்து எழுது. அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?


◼நீர் வாயு தொகுப்பு வாயு என்றும் அழைக்கப்படுகிறது.

◼இது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன்  வாயுக்களின்  கலவையாகும். 

◼கல்கரியின் மீது 10000C வெப்பநிலையில் நீராவியைச் செலுத்தி இது உற்பத்தி செய்யப்படுகிறது.


◼வாயுக்களின்கலவை என்பதால் இது தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுகிறது.


5. ஏன் ஆந்த்ரசைட் வகை நிலக்கரி மிகவும் உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது? அதற்கான காரணம் தருக.



◼ஆந்த்ரசைட் வகை நிலக்கரி நிலக்கரி மிகவும் இலேசானதாகவும், உயர்ந்த வெப்ப ஆற்றலைக் கொண்டதாகவும் உள்ளது. 

◼ஆந்த்ரசைட் நிலக்கரி கடினத் தன்மையையும், அடர் கருமை நிறத்தையும், பளபளக்கும் தன்மையையும் கொண்டது. 

◼இதிலுள்ள கார்பனின் சதவீதம் 86-97% ஆகும். 

◼இது பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது . 

◼ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான மாசுக்களையும் வெளியிடுகிறது.



6. ஆக்டேன் எண் - சீட்டேன் எண் வேறுபடுத்துக



ஆக்டேன் எண்

சீட்டேன் எண்

ஆக்டேன் எண் மதிப்பீடு பெட்ரோலுக்குப் பயன்படுகிறது.

சீட்டேன் எண் மதிப்பீடு டீசலுக்குப் பயன்படுகிறத

இது பெட்ரோலிலுள்ள ஆக்டேனின் அளவைக் குறிக்கிறது.

இது டீசல் எஞ்சினிலுள்ள எரிபொருளின் பற்றவைப்பு தாமதக்கால அளவைக் குறிக்கிறது.

பென்சீன் அல்லது டொலுவின் சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.

அசிட்டோனைச் சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.

உயர்ந்த ஆக்டேன் எண் பெற்றுள்ள எரிபொருளின் சீட்டேன் எண் குறைவாக இருக்கும்.

அதிக சீட்டேன் எண் பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் குறைவாக இருக்கும்.


7. தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களை எழுதுக.


தமிழகத்தில் கயத்தாறு, ஆரல்வாய்மொழி, பல்லடம் மற்றும் குடிமங்கலம் ஆகிய ஊர்களில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்கள்அமைந்துள்ளன.



8. சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும். இக்கூற்றை நியாயப்படுத்துக.


◼ சூரியனே பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலையை உண்டாக்கக்கூடிய முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும். ◼ சூரிய ஆற்றல் மட்டுமே தீர்ந்துவிடாத இயற்கை ஆற்றல் மூலமாகும். 

◼ இது விலையில்லா மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாக உள்ளது. 

◼ இது சுற்றுச்சூழலைப் பாதிக்காத, தீர்ந்து போகாத ஆற்றல் வளமாகும். 

◼ இது படிம எரிபொருள்களைப் பதிலீடு செய்து உலகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆற்றல் வாய்ந்த வளமாகும். 

◼ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினால் சூரிய ஆற்றலானது பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும், இன்றைய ஆற்றல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதாகவும் உள்ளது. 

◼ சூரிய ஆற்றல் ஒரு சுத்தமான ஆற்றல் ஆகும். 

◼ பல்வேறு கருவிகளைக் கொண்டு குறைந்த அளவு முயற்சியுடன் அதிகளவு ஆற்றலை சூரியனிடமிருந்து நாம் பெற முடியும்.


V. விரிவாக விடையளி.


1. நிலக்கரியின் பல்வேறு வகைகளைப் பற்றி விளக்குக.


நிலக்கரியிலுள்ள கார்பனின் அளவைப் பொருத்தும், அது வெளிவிடும் வெப்ப ஆற்றலைப் பொருத்தும் அதனை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம் அவையாவன: 

-லிக்னைட், 

-துணை பிட்டுமினஸ், 

-பிட்டுமினஸ் மற்றும் 

-ஆந்த்ரசைட். 


லிக்னைட் 

⚫இது பழுப்பு நிறமுடைய, மிகவும் தரம் குறைந்த நிலக்கரியாகும். 

⚫இது குறைந்த அளவு கார்பனைக் கொண்டுள்ளது. 

⚫இதிலுள்ள கார்பனின் சதவீதம் 25-35%. லிக்னைட் அதிக அளவு ஈரப்பதத்தையும், மொத்த நிலக்கரி இருப்பில் ஏறக்குறைய பாதியளவினையும் கொண்டுள்ளது. 

⚫இது மின்சார உற்பத்தியில் பயன்படுகிறது. தொகுப்பு முறையிலான இயற்கை வாயுவையும், உரப்பொருள்களையும் உற்பத்தி செய்ய லிக்னைட் பயன்படுகிறது. 


துணை-பிட்டுமினஸ் லிக்னைட் நிலக்கரி 

⚫அடர் நிறமாகவும் கடினமாகவும் மாறும்பொழுது துணை பிட்டுமினஸ் நிலக்கரி உருவாகிறது. 

⚫இது கருமை நிறமுடைய மந்தமான நிலக்கரி வகையாகும். லிக்னைட் வகையைவிட அதிகளவு வெப்பத்தை வெளியிடும் திறனைக் கொண்டது. ⚫இதிலுள்ள கார்பனின் சதவீதம் 35-44% ஆகும். 

⚫இது முதன்மையாக மின்சார உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுகிறது. ⚫இவ்வகை நிலக்கரியில் பிற நிலக்கரி வகைகளைவிட குறைந்தளவு சல்பர் உள்ளது. எனவே, இது மாசுக்களை உருவாக்குவதில்லை.


பிட்டுமினஸ் நிலக்கரி 

⚫அதிகளவு இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் துணை பிட்டுமினஸ் நிலக்கரி பிட்டுமினஸ் வகை நிலக்கரியாக மாற்றம் பெற்றுள்ளது. 

⚫இது அடர் கருமை நிறமும், கடினத் தன்மையையும் கொண்டது. இவ்வகைநிலக்கரியில் 45-86% கார்பன் உள்ளது. 

⚫இது அதிக வெப்ப ஆற்றலையும் பெற்றுள்ளது. 

⚫இது மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. 

⚫இது இரும்பு மற்றும் எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு கல்கரி வழங்குவதாகும். 

⚫இவ்வகை நிலக்கரியிலிருந்து கிடைக்கும் உப விளைபொருள்கள் வெவ்வேறு வேதிப் பொருள்களாக மாற்றப்பட்டு பெயிண்டுகள், நைலான் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. 


ஆந்த்ரசைட் 

⚫இது மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி வகையாகும். 

⚫இவ்வகை நிலக்கரி மிகவும் இலேசானதாகவும், உயர்ந்த வெப்ப ஆற்றலைக் கொண்டதாகவும் உள்ளது. 

⚫ஆந்த்ரசைட் நிலக்கரி கடினத் தன்மையையும், அடர் கருமை நிறத்தையும், பளபளக்கும் தன்மையையும் கொண்டது. 

⚫இதிலுள்ள கார்பனின் சதவீதம் 86-97% ஆகும். 

⚫இது பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது. 

⚫ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான மாசுக்களையும் வெளியிடுகிறது. 


2. சிதைத்து வடித்தல் என்றால் என்ன? பெட்ரோலியத்தை பின்னக்காய்ச்சி வடிக்கும் போது கிடைக்கும் பொருள்களைப் பற்றி எழுதுக.


காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்தும்பொழுது அது எரிவதில்லை. ஆனால், அநேக உபபொருள்களைத் தருகிறது. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்தும் இம்முறை சிதைத்து வடித்தல் எனப்படுகிறது.


ஆய்வகத்தில் நிலக்கரியைச் சிதைத்து வடித்தலை நாம் செய்ய முடியும். அதற்கான உபகரண அமைப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது.

⚫ஒரு சோதனைக்குழாயில் நுண்ணிய துகளாக்கப்பட்ட நிலக்கரி எடுத்துக் கொள்ளப்பட்டு வெப்பப்படுத்தப்படுகிறது. 

⚫குறிப்பிட்ட வெப்பநிலையில் நிலக்கரி சிதைவுற்று கல்கரி, கரித்தார், ⚫அம்மோனியா மற்றும் நிலக்கரிவாயு ஆகியவை உருவாகின்றன. இரண்டாவது சோதனைக் குழாயில் கரித்தார்படிகிறது. 

கரிவாயு பக்கக்குழாயின் வழியே வெளியேறுகிறது. 

⚫இவ்வினையில் உருவாகும் அம்மோனியா நீரினால் உறிஞ்சப்பட்டு அம்மோனியம் ஹைட்ராக்சைடு உருவாகிறது. 

⚫இறுதியாக கருமை நிற படிவாக கல்கரி முதலாவது சோதனைக்குழாயில் தங்கி விடுகிறது. 

⚫ஆயிரக்கணக்கான பொருள்கள், நிலக்கரி மற்றும் நிலக்கரியின் உபபொருள்களை பகுதிப்பொருள்களாகக் கொண்டுள்ளன. 

⚫சோப்பு, ஆஸ்பிரின் மருந்து, கரைப்பான், சாயம், பிளாஸ்டிக், செயற்கைஇழை(ரேயான், நைலான்போன்றவை) ஆகியவை அவற்றுள் சில பொருள்களாகும். 

⚫இதன்மூலம் கிடைக்கும் முக்கிய பொருள்கள், கல்கரி, நிலக்கரித்தார், அம்மோனியா மற்றும் நிலக்கரி வாயு ஆகும். 

கல்கரி 

⚫கல்கரி 98% கார்பனைக் கொண்டுள்ளது. இது நுண் துளைகளுடைய கருமையான மற்றும் மிகுந்த தூய்மையான நிலக்கரி வகையாகும். 

⚫இது ஒரு சிறந்த எரிபொருள். மேலும், இது புகையின்றி எரியக்கூடியது. 

⚫இது பெரும்பாலும் உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுத்தலில் ஒடுக்கியாகப் பயன்படுகிறது. 

⚫எரிபொருள்வாயுக்களான உற்பத்தி வாயு மற்றும் கார்பன் மோனாக்சைடும் ஹைட்ரஜனும் கலந்த கலவையான நீர்வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. 

கரித்தார் 

⚫இது பல்வேறு கார்பன் சேர்மங்களின் கலவையாகும். இது கெட்டியான, விரும்பத்தகாத மணமுடைய ஒரு கருமை நிற திரவமாகும். 

⚫இதனை பின்னக்காய்ச்சி வடிக்கும்பொழுது பென்சீன், டொலுவீன், பீனால் மற்றும் அனிலீன் போன்ற பல்வேறு வேதிப்பொருள்கள் கிடைக்கின்றன. ⚫இவை சாயங்கள், வெடிபொருள்கள், பெயிண்டுகள், செயற்கை இழைகள், மருந்துகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. 

⚫கரித்தாரிலிருந்து கிடைக்கும் மற்றொரு முக்கியப்பொருள் நாப்தலீன் உருண்டைகள் (அந்துருண்டைகள்) ஆகும். 

⚫இவை அந்துப்பூச்சி மற்றும் பிற பூச்சிகளை விரட்டுவதற்குப் பயன்படுகிறன்றன. 

கரி வாயு 

⚫இது நகரவாயு என்றும் அழைக்கப்படுகிறது. 

⚫இது ஹைட்ரஜன், மீத்தேன், மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்களின் கலவையாகும். 

⚫இக்கலவையில் உள்ள வாயுக்கள் எரியும் தன்மை கொண்டவை என்பதால், ⚫இது சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது. 

⚫மேலும் இது அதிக கலோரி மதிப்பும் கொண்டது. 

அம்மோனியா 

⚫நிலக்கரியிலிருந்து கிடைக்கும் மற்றொரு உபவிளைபொருள் அம்மோனியாவாகும். 

⚫இது அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.


3. பல்வேறு எரிபொருள் வாயுக்களைப் பற்றி எழுதுக.


உற்பத்தி வாயு 

⚫உற்பத்தி வாயு என்பது கார்பன்மோனாக்சைடு வாயுவும் நைட்ரஜன்வாயுவும் கலந்தகலவையாகும். 

⚫செஞ்சூடான கல்கரியின் மீது 1100°c வெப்பநிலையில் நீராவி கலந்துள்ள காற்றினைச் செலுத்துவதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது. 

⚫இது எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

⚫உற்பத்தி வாயு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. இது அமெரிக்காவில் மரவாயு என்றும், இங்கிலாந்தில் உறிஞ்சு வாயு என்றும் அழைக்கப்படுகிறது.



நிலக்கரி வாயு 

⚫இது ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலவையாகும். 

⚫நிலக்கரியைச் சிதைத்து வடிப்பதன் மூலம் இது பெறப்படுகிறது. 

⚫சிதைத்து வடித்தல் என்பது காற்றில்லா சூழ்நிலையில் நிலக்கரியை வெப்பப்படுத்துவதாகும். 

⚫இவ்வாயு எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் திறந்த வெப்ப உலையைச் சூடுபடுத்தப் பயன்படுகிறது. 

⚫சில உலோகவியல் செயல்பாடுகளில் ஒடுக்கும் பொருளாகவும் இவ்வாயு பயன்படுகிறது.


நீர் வாயு

⚫இது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன்வாயுக்களின்கலவையாகும். 

⚫கல்கரியின் மீது 1000°C வெப்பநிலையில் நீராவியைச் செலுத்தி இது உற்பத்தி செய்யப்படுகிறது.




⚫இது தொகுப்பு வாயு என்றும் அழைக்கப்படுகிறது. 

⚫மேலும், மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்ய இது பயன்படுகிறது. 

⚫தொழிற்சாலைகளில் எரிபொருளாகவும் இது பயன்படுகிறது.


உயிரி - வாயு

⚫உயிரி - வாயு என்பது மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு வாயுக்களின் கலவையாகும். 

⚫இவ்வாயு கரிமப் பொருள்களை உண்டுபண்ணும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளைச் சிதைவடையச் செய்து உருவாக்கப்படுகிறது. ⚫காற்றில்லா (ஆக்சிஜன் இல்லாத) சூழ்நிலையில் கரிமப் பொருள்கள் சிதைவடையும்பொழுது உயிரி - வாயு உருவாகிறது. 

⚫இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்திற்கு ஒரு உதாரணம் ஆகும்.


Popular posts from this blog

வகுப்பு 6 ப1அ3 அறிவியல் நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் வினா-விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

வகுப்பு 6 ப1அ2 விசையும் இயக்கமும் வினா-விடைகள்