8 - அறிவியல் - லிப்ரே ஆபீஸ் கால்க் - மதிப்பீடு - வினா- விடைகள்

 

லிப்ரே ஆபீஸ் கால்க் 


மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 

1. எல்லா சார்புகளும் ____________ என்ற குறியீட்டைக் கொண்டு துவங்கும். 

அ) 1 ஆ) - இ) > ஈ) } 

விடை: = 


2. ______என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிட உதவுகிறது. அ) Average ஆ) Sum இ) Min ஈ) Max 

விடை: ஆ) Sum


3. ____________ என்ற குறியீடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் சூத்திரத்தில் இடம்பெறுகிறது. 

அ) ampersand (&) ஆ) comma இ) exclamation ஈ) hyperlink 

விடை: அ) ampersand (&)


4. பின்வருவனவற்றில் எது தொடர்பு படுத்தும் செயலி? 

அ) + ஆ) > ஐ) - ஈ) NOT

விடை: ஈ) NOT

 

5. ____________ என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய மதிப்பை நமக்குத் தரும். 

அ) Average ஆ) Sum இ) Min ஈ) Max 

விடை: இ) Min


II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி 


1. Count என்ற சார்பை எடுத்துக்காட்டுடன் விளக்கு. 

COUNT() தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் எத்தனை எண் மதிப்புகள் உள்ளன என்பதைத் தருகிறது.


எடுத்துக்காட்டு = COUNT(A2:A6)

முடிவு 5


2. விளக்கப்படங்கள் ஏன் தேவைப்படுகின்றன? 


விளக்கப்படங்கள் என்பவை கொடுக்கப்பட்ட தரவுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும் படங்கள் ஆகும். 


3. தரவுகளை வரிசைப்படுத்துதல் என்றால் என்ன? 


கொடுக்கப்பட்ட தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துவதே தரவுகளை வரிசைப்படுத்துதல் எனப்படும். 


1. தேவையான தரவுகளை தேர்வு செய்க. 

2. Data -> Sort கிளிக் செய்க.


4. Max () , Min () சார்புகளின் பயன்கள் யாவை? 


MAX() - கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகப்பெரிய எண்ணைக் காண உதவுகிறது 


MIN () - கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய எண்ணைக் காண உதவுகிறது.


5. அறை முகவரி என்றால் என்ன?


வரிசைகளும், நெடுவரிசைகளும் வெட்டிக் கொள்ளும் பெட்டியே ஒரு அறை எனப்படும். ஒவ்வொரு அறையும் அதன் முகவரியால் குறிப்பிடப்படும். அறை முகவரி என்பது நிரல் எழுத்து மற்றும் நிரை எண்ணின் சேர்ப்பு ஆகும்.


Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

வகுப்பு 6 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்