விலங்குலகம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது அ. உளவியல் ஆ. உயிரியல் இ. விலங்கியல் ஈ. தாவரவியல் விடை: ஆ. உயிரியல் 2. கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன? i. சுவாசம் ii. இனப்பெருக்கம் iii. தகவமைப்பு iv. கழிவு நீக்கம் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு. அ. i, ii மற்றும் iv மட்டும் ஆ. i, ii மட்டும் இ. ii மற்றும் iv மட்டும் ஈ. i, iv, ii மற்றும் iii விடை: ஈ. i, iv, ii மற்றும் iii 3. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன? அ. தோல் ஆ. செவுள்கள் இ. நுரையீரல்கள் ஈ. சுவாச நுண்குழல் விடை: இ. நுரையீரல்கள் 4. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது அ. உணவு மற்றும் நீர் ஆ. நீர் மட்டும் இ. காற்று, உணவு மற்றும் நீர் ஈ. உணவு மட்டும் விடை: இ. காற்று, உணவு மற்றும் நீர் 5. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது? அ. மண்புழு ஆ. குள்ளநரி இ. மீன் ஈ. தவளை விடை: இ. மீன் 6. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு. அ. புலி, மான், புல், மண் ஆ. பாறைகள், மண், தாவர