வகுப்பு - 6 வெப்பம் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அதிலுள்ள மூலக்கூறுகள் அ)வேகமாக நகரத் தொடங்கும் ஆ) ஆற்றலை இழக்கும் இ) கடினமாக மாறும் ஈ) லேசாக மாறும் விடை : அ)வேகமாக நகரத் தொடங்கும் 2. வெப்பத்தின் அலகு அ) நியூட்டன் ஆ) ஜூல் இ) வோல்ட் ஈ) செல்சியஸ் விடை : ஆ) ஜூல் 3. 30°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச்சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை அ) 80°C ஆ) 50°C க்கு மேல் 80°C இ) 20°C ஈ) ஏறக்குறைய 40°C விடை : ஈ) ஏறக்குறைய 40°C 4. 50°C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50°C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும் ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும் ஈ) இரண்டின் வெப்பநிலை உயரும் விடை:ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 1....