வகுப்பு 6 ப1 இயல் ஒன்று விரிவானம் கனவு பலித்தது வினா-விடைகள்

 விரிவானம்   

இயல் ஒன்று - கனவு பலித்தது 


மதிப்பீடு


1. அத்தையின் கடிதக் கருத்துகளைச் சுருக்கி எழுதுக.


  • தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனையாளர்கள் பலரும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்களே! சாதனைக்கு மொழி ஒரு தடையே இல்லை.

  • நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள்.

  • தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன. 

  • நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பதுஅறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.

  • கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்.

பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது

திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

  • திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாதுஎன்ற அறிவியல் கருத்து

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால் நாழி

என ஔவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.


  • போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

  • சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணைஎன்னும் நூலில் காணப்படுகிறது. 

  • தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலைஎன்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.

  • தற்காலத்தில் அறிவியல் துறையில் மட்டுமின்றி அநைத்துத் துறைகளிலும் தமிழர்கள்  கோலோச்சி வருகிறார்கள்.

  • சாதனையாலர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்.

  • நமது ஊர் நூலகம் உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • நூல் வாசிப்பு உன் சிந்தனைக்கு வளம் சேர்க்கும், அறிவியல் மனப்பன்மை பெருகும்.

  • தமிழாலும், தமிழராலும் எந்தத் துறையிலும் எதையும் சாதிக்க முடியும். 

  • தொடர்ந்து முயற்சி செய். நீ வெற்றி பெருவாய்.

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்