வகுப்பு 6 ப1 இ3 விரிவானம் ஒளி பிறந்தது வினா-விடைகள்





இயல் மூன்று

விரிவானம் -ஒளி பிறந்தது



மதிப்பீடு


1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?


இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுவதாக அப்துல் கலாம் குறிப்பிடுவன:

  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். 

  • தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம். 

  • எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது. 

  • அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம். 

  • நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.  பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். 



2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?


 போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக்கண்டதாகவும், பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழைையக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கி, பின் அவர்கள் அதை அணிந்து நடந்து மகிழ்ந்த நிகழ்வுதான் தமக்குப் பெருமகிழ்வை அளித்தது என அப்துல கலாம் குறிப்பிடுகிறார்.

 

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்