வகுப்பு6 ப1இ3 தமிழ் கவிதைப்பேழை அறிவியல் ஆத்திசூடி

 இயல் மூன்று

கவிதைப்பேழை -அறிவியல் ஆத்திசூடி


சொல்லும் பொருளும்


இயன்றவரை - முடிந்தவரை

ஒருமித்து - ஒன்றுபட்டு

ஔடதம் - மருந்து


மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. உடல் நோய்க்கு ____________  ​​​​​​ தேவை.

அ.ஔடதம்

ஆ.இனிப்பு

இ.உணவு

ஈ.உடை

விடை: அ.ஔடதம்


2. நண்பர்களுடன் ___________ விளையாடு.

அ.ஒருமித்து

ஆ.மாறுபட்டு

இ.தனித்து

ஈ.பகைத்து

விடை: அ.ஒருமித்து


3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________.

அ. கண்+அறி

ஆ.கண்டு+அறி

இ.கண்ட+அறி

ஈ.கண்+டறி

விடை: ஆ.கண்டு+அறி


4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________.

அ.ஓய்வு+அற

ஆ.ஓய்+அற

இ.ஓய்+வற

ஈ.ஓய்வு+வற

விடை: அ.ஓய்வு+அற


5. ஏன்+என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ.ஏன்என்று

ஆ.ஏனென்று

இ.ஏன்னென்று

ஈ.ஏனன்று

விடை: ஆ.ஏனென்று


6.ஔடதம்+ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ.ஔடதமாம்

ஆ.ஔடதம்ஆம்

இ.ஔடதாம்

ஈ. ஔடதஆம்

விடை: அ.ஔடதமாம்


எதிர்ச்சொற்களைப் பொருத்துக

1. அணுகு     - விலகு

2. ஐயம்     - தெளிவு

3. ஊக்கம் - சோர்வு

4. உண்மை - பொய்மை


பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக.

1. சிந்தனை கொள் அறிவியல்

விடை: அறிவியல் சிந்தனை கொள்


2. சொல் தெளிந்து ஐயம்

விடை: ஐயம் தெளிந்து சொல்


3. கேள் ஏன் என்று

விடை: ஏன் என்று கேள்


4. வெல்லும் என்றும் அறிவியலே

விடை: அறிவியலே என்றும் வெல்லும்


குறு வினா

1. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம் ஆகும்.


சிறுவினா

1. பாடலின் கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

அறிவியலே என்றும் வெல்லும் என்பதால், என்றும் அறிவியல் சிந்தனையுடன், ஆய்வுகளில் மூழ்கி, ஈடுபாட்டுடன் அவற்றை புரிந்து, உண்மையைக் கண்டறியும் போது கிடைக்கும் ஊக்கம் வெற்றியைத் தேடித்தரும். ஏன் என்று கேள்விகளைக் கேட்கும் பொழுது அறிவியலை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம், சொல்வதை ஐயம் இன்றி தெளிவுடன் சொல்லவும், உடனிருப்பவர்களுடன் ஒன்றிணைந்து ஓய்வை எண்ணாமல் உழைக்கும் போது கிடைக்கும் அனுபவம், ஒவ்வொரு சோதனைக்கும் மருந்தாக அமையும்.


சிந்தனை வினா

1. உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?

  •  அலோபதி

  • ஹோமியோபதி

  • சித்தமருத்துவம்

  • ஆயுர்வேதம்

  • யுனானி

  • அக்குபங்சர்

Popular posts from this blog

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 அறிவியல் நீர் மதிப்பீடு வினா விடைகள்