வகுப்பு 6 ப1அ5 அறிவியல் விலங்குலகம் வினா-விடைகள்

 





விலங்குலகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது

அ. உளவியல்  

ஆ. உயிரியல்

இ. விலங்கியல்   

ஈ. தாவரவியல்

விடை: ஆ. உயிரியல்


2. கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன?

i. சுவாசம்    

ii. இனப்பெருக்கம்

iii. தகவமைப்பு  

iv. கழிவு நீக்கம்

 சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

அ. i, ii மற்றும் iv மட்டும்

ஆ. i, ii மட்டும்

இ. ii மற்றும் iv மட்டும்

ஈ. i, iv, ii மற்றும் iii

விடை: ஈ. i, iv, ii மற்றும் iii


3. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?

அ. தோல் 

ஆ. செவுள்கள்

இ. நுரையீரல்கள் 

ஈ. சுவாச நுண்குழல்

விடை: இ. நுரையீரல்கள்


4. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது

அ. உணவு மற்றும் நீர்

ஆ. நீர் மட்டும்

இ. காற்று, உணவு மற்றும் நீர்

ஈ. உணவு மட்டும்

விடை: இ. காற்று, உணவு மற்றும் நீர்


5. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?

அ. மண்புழு 

ஆ. குள்ளநரி

இ. மீன் 

ஈ. தவளை

விடை: இ. மீன்


6. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

அ. புலி, மான், புல், மண்

ஆ. பாறைகள், மண், தாவரங்கள், காற்று

இ. மண், ஆமை, நண்டு, பாறைகள்

ஈ. நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

விடை: ஈ. நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்


7. கீழ்கண்டவற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?

அ. ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்

ஆ. மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்

இ. மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

ஈ. காட்டு விலங்குகளுடன் கூடிய காடு

விடை: இ. மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்


8. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

அ. கனமான மற்றும் வலிமையான எலும்புகள்

ஆ. மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்

இ. உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்

ஈ. தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

விடை: இ. உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்


9. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது

அ. போலிக்கால்கள் 

ஆ. கசையிழை

இ. பாதம் 

ஈ. குறு இழை

விடை: ஈ. குறு இழை


10. கங்காரு எலி வசிப்பது

அ. நீர் வாழிடம்

ஆ. பாலைவன வாழிடம்

இ. புல்வெளி வாழிடம்

ஈ. மலைப்பிரதேச வாழிடம்

விடை: ஆ. பாலைவன வாழிடம்


II கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நீர்நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _____________ ​​​​​ என்று அழைக்கலாம்.

விடை: சூழ்நிலை மண்டலங்கள்


2. செல் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை _____________ மற்றும் _____________  என வகைப்படுத்தலாம்.

விடை: ஒரு செல் உயிரி, பல செல் உயிரி


3. பறவைகளின் வால் திசை திருப்புக்கட்டையாக செயல்பட்டு _____________ உதவுகிறது.

விடை: திசையை மாற்றுவதற்கு


4. அமீபா _____________உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.

விடை: போலிக்கால்கள்


III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

1. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது வசிக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும்.

விடை: சரி


2. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

விடை: தவறு 

புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை புவியின் அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும்.


3. ஒருசெல் உயிரியான அமீபா, போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றது.

விடை: சரி


4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.

விடை: தவறு 

பறவைகள் ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலமும் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும். இதற்கு இருவிழிப் பார்வை என்று பெயர்.



5. பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.

விடை:  தவறு 

பாரமீசியம் ஒரு ஒருசெல் உயிரி.


IV. பின்வருவனவற்றை நிறைவு செய்க.

1. மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை _____________என்று அழைக்கிறோம்.

விடை:  நில வாழிடங்கள்


2. ஒருசெல்லால் ஆன உயிரினங்கள்  _____________என்று அழைக்கப்படுகின்றன.

விடை: ஒரு செல் உயிரி


3. மீனின் சுவாச உறுப்பு _____________ஆகும்.

விடை: செவுள்கள்


4. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் _____________.

விடை: நடக்கும் தன்மை உடையவை.


5. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _____________சேமிக்கின்றன.

விடை: கொழுப்பை


V. மிகச் சுருக்கமாக விடையளி.

1. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?

பறவைகள் தங்களது கூர்மையான நகங்கள் மூலமும், சக்திவாய்ந்த அலகுகள் மூலமாகவும் இரைகளைப் பிடிக்கின்றன.


2. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?

இந்தியாவில் ஒட்டகங்களை ராஜஸ்தான் போன்ற பாலைவனப்பகுதிகளில் காணமுடியும்.


3. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?

அமீபா போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.


4. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?

தலை, உடல், வால்


5. பறவைகள் காற்றில் பறக்கும்பொழுது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன?

பறவைகள் காற்றில் பறக்கும்பொழுது வால் பகுதியைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன.


VI. சுருக்கமாக விடையளி.

1. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.


ஒரு செல் உயிரி

பல செல் உயிரி

ஒரு செல்லால் ஆனவை

பல செல்களால் ஆனவை

ஒரு செல்லே வாழ்க்கைச் செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கின்றது. 

வெவ்வேறு செல்கள் வெவ்வேறு செயல்களைச் செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்களைப் பெற்றுள்ளன.  

பொதுவாக இவை அளவில் மிகச் சிறியவை. நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க இயலும

பொதுவாக இவை அளவில் பெரியவை. கண்களால் பார்க்க இயலும

திசுக்கள், உறுப்புக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கிடையாது.

திசுக்கள், உறுப்புக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உள்ளன. 

செல்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி நடைபெறுகிறது

செல்பிரிவு மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரித்து வளர்ச்சி நடைபெறுகிறது.

எ.கா : அமீபா, பாரமீசியம் மற்றும் யூக்ளினா

எ.கா : மண்புழு, மீன், தவளை , பல்லி மற்றும் மனிதன்.

 

2. துருவக் கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.


துருவக் கரடி

வாழிடம் : துருவப் பகுதி

தகவமைப்புகள்: பாதுகாப்பிற்கேற்ற தடிமனான தோல், வெண்மையான உரோமங்கள்


பென்குயின்

வாழிடம் : துருவப் பகுதி

தகவமைப்புகள்: நீந்துவதற்கேற்ற துடுப்புகள், நடப்பதற்கேற்ற இரண்டு    கால்கள்


3. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவியாக உள்ள சிறப்பம்சம் எது?

  • பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட, படகு போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. 

  • இந்த உடல் அமைப்பின் மூலம் காற்றில் பறக்கும்போது அவற்றிற்கு குறைந்த அளவு தடையே ஏற்படுகிறது.

  • பறவையின் முன்னங்கால்கள் இரண்டும் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன. 

  • பறவைகள் காற்றறைகளுடன் கூடிய எடை குறைவான எலும்புகளைப் பெற்றுள்ளன.

  • பறவையின் வால் அது பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

  • பறத்தலின்போது ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்குவதற்கேற்ப வலிமை மிக்க மார்புத் தசையினைப் பெற்றுள்ளன. 



4. முதுகெலும்புள்ள விலங்குகளின் பல்வேறு தகவமைப்புகளைக் கூறுக.


வரையாடு:

வாழிடம்: மலைப்பகுதி

தகவமைப்புகள்: ஓடுவதற்கேற்ற வலுவான குளம்புகள், குளிரில் இருந்து பாதுகாக்க நீளமான உரோமங்கள்


சிங்கம்:

வாழிடம்: காடு

தகவமைப்புகள்: வலுவான மற்றும் வேகமாகஓடக் கூடியதன்மை,இரையைப் பிடிப்பதற்கான கூர்மையான நகங்கள்.


மீன்:

வாழிடம்: நீர்

தகவமைப்புகள்:படகு போன்ற உருவம், பாதுகாப்பான செதில்கள், சுவாசிக்க செவுள்கள், நீரில் நீந்த துடுப்புகள், திசைமாற்ற வால்


பல்லி:

வாழிடம்: வெப்பமண்டலப்பகுதி

தகவமைப்புகள்: வலிமையான கால்கள், இரையைப்பிடிக்க நீட்சியுடைய நாக்கு,விரலிடைச்சவ்வுடைய விரல்கள், நன்கு சுழற்றும் தன்மையுடைய தலைப்பகுதி.



VII. விரிவாக விடையளி

1. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.

ஒட்டகம் நீர் குறைந்த, வெப்பநிலை அதிகமான பாலைவனத்தில் வாழ்கின்றது. 


அதன் உடலானது கீழ்க்காணும் சில சிறப்பு அமைப்புக்களைப் பெற்றுள்ளது. 

  • ஒட்டகத்திற்கு நீண்ட கால்கள் இருப்பதால் பாலைவனத்தில் உள்ள சூடான மணலிற்கு மேலே அதன் உடல் சற்று உயரத்தில் இருக்கின்றது. 

  • ஒட்டகம் பெரிய மற்றும் தட்டையான கால்கள் மூலம் மிருதுவான மணலின் மீது நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளது

  • தண்ணீர் கிடைக்கும்போதுஅதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. 

  • வறண்ட பாலைவனங்களில் இருக்கும்போது தனது உடலில் நீரைச் சேமித்து கொள்ள, ஒட்டகம் 

    • குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. 

    • அதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை. 

    • உடலில் இருந்து சிறிதளவு நீரையே இழப்பதால், அதனால் பல நாட்களுக்கு நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியும். 

  • ஒட்டகம் தனது திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கின்றது. ஆற்றல் தேவைப்படும் காலங்களில் அது தன் திமில் பகுதியில் சேமித்து வைத்துள்ள கொழுப்பைச் சிதைத்து ஊட்டம் பெறுகின்றது. 

  • ஒட்டகத்தின் நீண்ட கண் இமைகள் மற்றும் ரோமங்கள் அதன் கண் மற்றும் காதுகளை புழுதிப் புயலிலிருந்து பாதுகாக்கிறது. 

  • பாலைவனத்தில் ஏற்படும் புழுதிப் புயலின் மூலம் ஏற்படும் தூசிகள் உள்ளே செல்வதைத் தடுக்க அவை நாசித்துவாரங்களை மூடிக்கொள்கின்றன.

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்