8 ப1 சஅ கு1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? வினா விடைகள்

 

அலகு -1

   மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?>>> 

 


மதிப்பீடு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்? 

அ) குடியரசுத் தலைவர் ஆ) துணைக் குடியரசுத் தலைவர் 

இ) பிரதம மந்திரி ஈ) முதலமைச்சர் 

விடை: அ) குடியரசுத் தலைவர்

2. மாநில அமைச்சரவைக் குழுவின்தலைவர் 

அ) ஆளுநர் ஆ) முதலமைச்சர் இ) சபாநாயகர் ஈ) உள்துறை அமைச்சர் 

விடை: ஆ) முதலமைச்சர்

3. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர் 

அ) உள்துறை அமைச்சர் ஆ) குடியரசுத் தலைவர் இ) சபாநாயகர் ஈ)ஆளுநர் 

விடை: ஈ)ஆளுநர்

4. உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்? 

அ) ஆளுநர் ஆ) முதலமைச்சர் 

இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ஈ) குடியரசுத் தலைவர் 

விடை: ஆ) முதலமைச்சர் 

5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 

அ) 62  ஆ) 64  இ) 65  ஈ) 58 

விடை: அ) 62


II கோடிட்ட இடங்களை நிரப்புக 

1. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை__________ ஆகும். 

விடை: 28

2. ஆளுநரின் பதவிக்காலம் __________ ஆண்டுகள் ஆகும். 

விடை: 5

3. மாவட்ட நீதிபதிகள் __________ ஆல் நியமிக்கப்படுகின்றனர். 

விடை: ஆளுநர்

4. ஆளுநர் ஒரு மாநிலத்தின் __________ ஆவார்.

விடை: நிர்வாகத் தலைவர்

5. ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக __________வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

விடை: 25


III பொருத்துக


1. ஆளுநர்

பெயரளவுத் தலைவர்

2. முதலமைச்சர்

உண்மையான தலைவர்

3. சட்டமன்ற பேரவை

கீழவை

4. சட்டமன்ற மேலவை

மேலவை


IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

1. முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

விடை: சரி

2. ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.

விடை: தவறு

3. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.

விடை: சரி


V சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்.

i. குடியரசுத் தலைவர்

ii. துணை குடியரசுத் தலைவர்

iii. ராஜ்ய சபை உறுப்பினர்கள்

iv. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

அ) i, ii & iii சரி ஆ) i மற்றும் iii சரி

இ) I,iii மற்றும் iv சரி ஈ) I,ii,iii மற்றும் iv சரி

விடை: இ) I,iii மற்றும் iv சரி


VI கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

1. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.

இந்தியாவில் மாநில சட்டமன்றம் இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும். மேலவை என்பது சட்டமன்ற மேலவை எனவும் 

கீழவை என்பது சட்டமன்ற பேரவை எனவும் அழைக்கப்படுகிறது.


2. மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?

இந்தியக்குடிமகனாகவும், 25 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். 


3. முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை ஆளுநர், மாநில முதலமைச்சராக நியமிக்கிறார். முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார். 


4. மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

முதலமைச்சர் (இவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்) அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து, அமைச்சர்களை தேர்வு செய்கிறார். இவ்வாறு முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. 


VII விரிவான விடையளி

1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

„ முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன. 

„ மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின்பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார். 

„ பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார். 

„ முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார். மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும். 

„ மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.


2. மாநில சட்ட மன்றத்தின் அதிகாரங்கள் மற்றூம் பணிகளை விவரி.

  • மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும். 

  • சட்டமன்றம் மாநிலப் பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.

  • சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலகிக் கொள்ளவோ இயலாது.

  • மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது. நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டுவர இயலும். 

  • சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்கின்றனர். மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்கின்றனர



3. உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும்,பணிகளையும் எழுது.

„ அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு நீதிப் பேராணை, தகுதி முறை வினவும் நீதிப்பேராணை, தடை உறுத்தும் நீதிப்பேராணை, கட்டளையிடும் நீதிப்பேராணை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன. 

„ ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. 

„ சார் நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர் நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம். 

„ உயர் நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது. 

„ உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது. 

„ நீதி நிர்வாகத்திற்காக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட நீதிமன்றத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும். மாவட்ட நீதிபதிகள் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்