வகுப்பு 8 சஅ ப3 புவிப்படங்களைக் கற்றறிதல் பாடப்புத்தக வினா-விடைகள்

 

புவிப்படங்களைக் கற்றறிதல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு _____________ ஆகும்.

அ)மக்களியல்

ஆ)புவிப்படவியல்

இ)இயற்கையமைப்பு

ஈ)இடவியல்

விடை : ஆ)புவிப்படவியல்

2. ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் _____________

அ)நிலக்கானி புவிப்படம்

ஆ)நிலத்தோற்ற புவிப்படம்

இ)காலநிலையியல் புவிப்படம்

ஈ)மூலாதார புவிப்படம்

விடை : ஈ)நிலத்தோற்ற புவிப்படம்

3. ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகள் _____________ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது

அ)மஞ்சள்

ஆ)பழுப்பு

இ)வெளிர்நீலம்

ஈ)அடர் நீலம்

விடை : இ)வெளிர்நீலம்

4. பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் _____________ ஆகும்

அ)நிலக்கானி புவிப்படங்கள்

ஆ)தலப்படங்கள்

இ)சம அளவுக்கோட்டுப் படங்கள்

ஈ)போக்குவரத்துப் படங்கள்

விடை : அ)நிலக்கானி புவிப்படங்கள்

5. மக்கட்தொகை பரவலை _____________ மூலம் காண்பிக்கலாம்

அ)கோடுகள்

ஆ)வண்ணங்கள்

இ)புள்ளிகள்

ஈ)சம அளவுக்கோடுகள்

விடை : ஆ)வண்ணங்கள்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புவிக்கோள மாதிரி என்பது _____________ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.

விடை : புவியின்

2. புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளபரப்பில் வரையப்படும் முறை _____________ எனப்படும்

விடை : புவிப்படம்

3. சமஅளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு _____________ 

விடை : சமஅளவுக்கோடு (ஐசோலைன்)

4. காணிப்படங்கள் பொதுவாக _____________ஆல் பராமரிக்கப்படுகின்றன

விடை : அரசாங்கத்தால்

5. _____________ புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன

விடை : கருத்துப்


III.பொருத்துக

புவிப்பட விளக்கம்

புவிப்படத்தின் திறவுகோல்

வட கிழக்கு

45o

சம உயரக்கோடு

பழுப்பு நிறம்

காணிப்படங்கள்

வரி விதிப்பு

நிழற்பட்டைப் படம்

கருத்துப்படங்கள்


IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. கூற்று : சிறிய அளவை புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன

காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்

அ)கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

ஆ)கூற்று தவறு, காரணம் சரி

இ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

ஈ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை : இ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி


2. கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்

காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன

அ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

ஆ)கூற்று தவறு, ஆனால் காரணம் தவறு

இ)கூற்று சரி, காரணம் தவறு

ஈ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை : அ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி


V. சுருக்கமாக விடையளி

1. புவிப்பட அளவை வரையறு

புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப் பரப்பில் உள்ள தொலைவிற்கம் இடையிலான விகிதத்தைக் குறிப்பதாகும்.

2. இயற்கையமைப்பு புவிப்படம் என்றால் என்ன?

ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களைக் காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்பு அல்லது நிலத்தோற்றப் புவிப்படங்கள் எனப்படுகின்றன.

3. வரைபடக் கோட்டுச் சட்டம் பற்றி குறிப்பு வரைக

கோள வடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்கு பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையே வரைபட கோட்டுச் சட்டமாகும்

4. இடைநிலைத் திசைகளின் பெயர்களை குறிப்பிடுக

 • வடகிழக்கு

 • வடமேற்கு

 • தென்கிழக்கு

 • தென்மேற்கு

5. காணிப் புவிப்படங்களின் பயன்கள் யாவை?

உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, வரிவிதிப்பு, பெரும் பண்ணை, பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களை குறிப்பிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன.


VI. வேறுபடுத்துக

1.  நிலத்தோற்றப் படங்கள் மற்று கருத்துப்படங்கள்

நிலத்தோற்றப் படங்கள்

கருத்துப்படங்கள்

ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களை காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள்

வெப்பநிலை வேறுபாடுகள், மழைப்பரவல், மக்களடர்த்தி போன்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்காகத் தயாரிக்கப்படுபவை.

இயற்கை அமைப்புகளான பாலைவனங்கள், ஆறுகள், மலைகள், சமவெளிகள் மற்றும் பீடபூமிகள் ஆகியவற்றை குறிப்பிடுவது இதன் முதன்மையான நோக்கமாகும்.

உலகளாவிய மக்களடர்த்தி, நோயத்தாக்கம் போன்றவற்றின் பிரதேச வேறுபாடுகளை காண்பிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


2. பெரிய அளவை புவிப்படங்கள் மற்றும் சிறிய அளவை புவிப்படங்கள்

பெரிய அளவை புவிப்படங்கள்

சிறிய அளவை புவிப்படங்கள்

சிறிய பகுதிகளான வட்டம் அல்லது மாவட்டம் போன்றவற்றை காண்பிக்க பயன்படுத்தப்படுகின்றன

கண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய நிலப்பகுதிளைக் காண்பிக்க பயன்படுத்தப்படுகின்றன

சிறிய அளவை புவிப்படங்களை விட அதிக விவரங்களை தருகிறது.

அதிக பரப்பில் குறைவான விவரங்களை தருகிறது


3. புவிக்கோள மாதிரி மற்றும் புவிப்படம்

புவிக்கோள மாதிரி

புவிப்படம்

புவிக்கோள மாதிரியானது புவியை முப்பரிமாணத்தில் சித்தரிக்கின்றது

புவிப்படங்களை புவியின் இரு பரிமாண சித்தரிப்பாகும்.


புவியின் வடிவிலான ஒரு சிறிய தோற்றமாகும்

முழு புவியையோ அல்லது ஒரு பகுதியையோ சமதளபரப்பில் அளவையுடன் பதிலீட்டுக் காட்டும் ஒரு முறை ஆகும்.


VII. விரிவான விடையளி

1. பல்வேறு புவிப்பட அளவைகளை விரிவாக விளக்குக

புவிப்படஙகளில் அளவைகள் மூன்று வகைககளில் குறிப்பிடப்படுகின்றன.அவை;

1. வாக்கிய முறை அல்லது சொல்லளவை (Statement or verbal scale)

2.பிரதிபின்ன முறை (அ) எண்சார் பின்னமுறை (அ) விகிதாச்சார முறை (Representative fraction or Ratio scale)

3. வரை கலை அல்லது நேரியல் அளவை (Graphical or Bar scale)

வாக்கிய முறை அல்லது சொல்லளவை

 • இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது

 • 1செ.மீ. என்பது 1கி.மீ அதாவது வரைபடத்தில் 1 செ.மீ. என்பது நிலப்பகுதியில் 1கி.மீ தூரத்தை குறிக்கின்றது.

பிரதிபின்ன முறை (அ) எண்சார் பின்னமுறை (அ) விகிதாச்சார முறை

 • இம்முறையில் புவிபடப்பரப்பில் உள்ள தொலைவும் புவிபரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது

 • உதாரணமாக 1 : 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளை குறிக்கின்றது.

வரைகலை அல்லது நேரியல் அளவை

 • இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்குதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கோடு மேலும் சிறிய அளவிலான பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்

 • இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.

 • இவ்வளவைகள் மாறாதவை என்பதால் புவிப்படநகல்கள் எடுத்துக் கொள்ள ஏதுவாக உள்ளது இதன் சிறப்பம்சமாகும்

2. காணிப்புவிப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை விவரி

ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களை காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன. இவ்வகைப்படங்கள் திட்ட புவிப்படங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பெரிய அளவை கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றம் கட்டடங்களின் முழு விவரங்களையும் அளிக்கின்றன.

காணிப்புவிப்படத்தின் முக்கியத்துவத்துவம்

 • காணிப்புவிப்படங்கள் ஒரு நிலத்தின் நில உடமை, எல்லைகள், மாதிரிப்படங்கள், கட்டடத்திட்டப் படங்கள், விளக்கப்படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன

 • தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்ளவும், வரிவிதிப்பிற்கும் இவ்வகை புவிப்படங்கள் பயன்படுத்தப்பட்டன

3. மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக

 • புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்கு புவிப்படக்குறியீடு மற்றம் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 • இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

 • ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன. இதன் மூலம் புவிப்பட கருத்துகளையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்

 • சில குறியீடுகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்த சர்வதேச ஒப்பந்தம் அல்லது நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

எ.கா


பேருந்து நிலையம்


பொது தொலைபேசியகம்


இருப்புப்பாதை


பயன்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம்


Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்